Showing posts with label புதுக்கோட்டை ஞானாலயா. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை ஞானாலயா. Show all posts

Tuesday, 30 June 2015

ஜெயகாந்தன் புகழ் அஞ்சலி கூட்டத்தில் ஞானலயா கிருஷ்ணமூர்த்தி உரை 26.04.2015

கடந்த ஏப்ரல் 26 ம் தேதி புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்த ஜெயகாந்தன் புகழ் அஞ்சலி கூட்டத்தில்
திரு.S. ஆரோக்கியசாமி
மருத்துவர் திரு. ஜெயராமன்
முனைவர் நா.அருள்முருகன்
எழுத்தாளர் சந்திரகாந்தன்
ஞானாலயா ஆய்வு நூலகம் திரு.பா. கிருஷ்ணமூர்த்தி (சிறப்புரை)
M.T.கந்தசாமி ஆகிய அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு உரை ஆற்றினர்

அந்த தொகுப்பின் ஒலி,ஒளி வடிவம் உங்களுக்காக இங்கே




மேலும் வருகிற ஆகஸ்ட் 16 அன்று ஞானலயா பவளவிழா கொண்டாட இருக்கிறது.. இது பற்றிய விபரம் இந்த இணைப்பில்


நன்றி
நிகழ்காலத்தில் சிவா


 ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, 
ஞானாலயா ஆய்வு நூலகம்,
 6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
 புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
 தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

Tuesday, 23 June 2015

ஞானாலயா பவளவிழா மலர் 2015

இன்றைய கணினி யுகத்தில் ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றி ஓரளவிற்கே நண்பர்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. அச்சுத்துறை வளர்ச்சி அடைய, அடைய தமிழில் புத்தகங்கள் வெளியாகத் துவங்கின.  கணினிகள் இல்லாத காலம் அது.. அப்போது வெளியிடப்பட்ட நூல்கள் பல இன்று காலத்தால் இல்லாமல் போயின.. அப்படி மீதம் இருப்பினும் முதல்பதிப்பு எனும் மூலவடிவில் இருந்து மாறுபட்டவை பல நூல்கள்.

இந்தத் தமிழ் சமூகம் காலத்தின் மாற்றத்தினால் எதை இழந்தாலும், அச்சில் வந்த நூல்களை வரும் தலைமுறைக்கு முழுமையாக அர்பணிக்கவேண்டும் என்ற உணர்வோடு சேமிக்கப்பட்டவைதாம் முதல்பதிப்பு நூல்கள்.

ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புத்தக சேகரிப்பின் 60 ஆண்டு நிறைவு விழா  மற்றும் இவரது 75 வயதை ஒட்டியும் பெருமைப்படுத்தும் விதமாக பவளவிழா நடைபெற உள்ளது. இது குறித்த அமைக்கப்பட்ட குழுவினரின் விபரங்கள் இணைப்பில் உள்ளது.

விழாவிற்கான இடமும் தேதியும் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்விழாவில் எங்ஙனம் தங்கள் பங்களிப்பை அளிக்க விரும்பினாலும் அதற்கேற்ற வகையில் விபரங்களை அளிக்க வேண்டியே இந்த பதிவு.

இந்த விழாவிற்கான நன்கொடைகள் பெறுவதற்கென நிதிக்குழு செயலாளர் அவர்களின் பெயரில் இதற்கென புதிய வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு இருக்கிறது.

Dr. JAYARAMAN  N
Account no:3454327836
central bank of india
IFSC Code: CBIN0282105
Branch: PUDUKOTTAI

தங்களின் நன்கொடைகள் online transfer ஆக இருக்கும்பட்சத்தில் மேற்கண்ட வங்கிக்கணக்குக்கு அனுப்பிவிட்டு தகவல்களை இங்கே பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். உரிய இரசீதுகளை இந்த விழா மலர்க்குழு உறுப்பினர்களான திரு.ஜோதிஜி, மற்றும் திரு.நிகழ்காலத்தில் சிவா  ஆகியோர் உங்களுக்கு அனுப்பிவைப்பார்கள்.

ஞானாலயா சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், அனுபவங்களையும் அனுப்பி வைக்கலாம். அவைகளும் விழாமலரின் முதன்மைப் பதிப்பாசிரியர் திரு. வைகறை அவர்களால் பரிசீலிக்கப்பட்டு விழாமலரில் இடம்பெறும்.



அரிய தமிழ் நூல்களை பாதுகாப்பதிலும், பாதுகாத்த தம்பதியினரை பெருமைப் படுத்துவதிலும் நம் பங்களிப்பை உறுதி செய்வோம்..

நன்றி
நிகழ்காலத்தில் சிவா


 ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, 
ஞானாலயா ஆய்வு நூலகம்,
 6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
 புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
 தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

Sunday, 7 April 2013

தி.ஜ.ர பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நமது வலைதளத்திற்கென சிறப்புரையாக பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்ட உரை....

புதுக்கோட்டை நண்பர் கார்த்தி அவர்கள் உதவியால் யூடியூப்-ல் பகிரப்பட்டது. இது போன்ற நண்பர்கள் உதவியால் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆக்கங்கள் ஆவணப்படுத்துதல் எளிதாகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் புதுக்கோட்டை சார்ந்த நண்பர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும். இவரை பாராட்டுவதோடு,  இந்த உரை வழக்கம் போல் எங்கும் கிடைக்காத விபரங்கள் அடங்கியதாக இருப்பதை பகிர்ந்து கொள்கிறேன்.




ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற எண்ணத்தில்.. 
நிகழ்காலத்தில் சிவா


 மேலும் விபரங்களுக்கு..



ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

Tuesday, 2 April 2013

சி.சு.செல்லப்பா நூற்றாண்டுவிழா உரை - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

சிறுபத்திரிக்கைகளுக்குப் பின்னால் உள்ள பெரும் சரித்திரம் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தஞ்சாவூர் பாரதி சங்கத்தில் தமிழறிஞர்களும் வாக்கும்  என்ற பொருளில்  சி.சு.செல்லப்பாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆற்றிய புத்தம்புதிய உரை....(இடம்:-சுப்பையா நாயுடு உயர்நிலைப்பள்ளி, தஞ்சை)

இனி உரையிலிருந்து....

எஸ்.ரா. நூலில் இருப்பதாக தினமணியில், திருக்குறளை திருத்துவதா? மஹாவித்வான் தியாகராஜ செட்டியார் வாழ்க்கையில் நடந்த சம்பவமாக போட்டிருந்த தகவல் தவறானது. நடந்தது வேறு.

தமிழ்த்தாத்தா உ.வே.ச விற்கு சங்க இலக்கியங்களைப் பதிப்பிப்பதற்கும், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிவதற்கும் வாய்பினை ஏற்படுத்தித் தந்தவரே மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் முதல் மாணவரான இந்த தியாகராஜ செட்டியார்தான். இவர் இல்லையெனில் உ.வே.ச இல்லை. இந்த நிகழ்வுக்கு தந்த அவர் தந்த தலைப்பு..’திருக்குறளைத் திருத்திய பாதிரியார்.

இவர் உறையூரில் இருந்தபோது நடந்த நிகழ்வுதான் திருக்குறள் பற்றியது உண்மை என்ன?.... கேளுங்கள் உரையில்:)

(..சமீப காலத்திய உண்மைகளே எப்படி மழுங்கடிக்கப்படுகின்றன என்பதையும் அறிந்து நாம் செய்ய வேண்டியது என்ன? என முடிவு செய்யுங்கள்.)

#########

லட்சக்கணக்கான பேர் படிக்கக்கூடிய தினமணி சிறுவர்மணியில் வந்த ஒரு செய்தி..மகாத்மா - டால்ஸ்டாய்ஸ் இடையே நடந்த நிகழ்வுபற்றி - பொய்யானது என்பதை சாதரணமாக சிந்திக்கின்றவர்களுக்கு கூட தவறு என்பது புலப்படும் என்பதை சொல்கிறார். ஆதாரங்களோடு, .. ஆதங்கத்தோடு.. பத்திரிக்கையை குறை சொல்வது இவரது நோக்கமில்லை. வரலாற்றை ஆவணப்படுத்துவது என்பது போய் வரலாற்றை திரிப்பது என்ற நிலை தற்போது  இருக்கிறது. இது நல்லதல்ல என்ற செய்தியை நமக்கு ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்

########

சிற்றிலக்கிய வரலாற்றில் மணிக்கொடி 1933 ல் தோன்றிய வரலாறு,
நவயுக பிரசுரலாயம் மூலம் முதல்முதலாய் மலிவுவிலை பதிப்புகள்.
இவருடன் முப்பது வருடங்கள் பழகிய அனுபவம் உள்ள ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரையில் தொடர்ந்து.......

எழுத்து என்ற விமர்சன இதழ் 1959 சனவரி தோற்றுவிக்கப்பட்டு 12 வருடம் வெளிவந்தது. சிறு பத்திரிக்கை உலகில் சாதனை புரிந்த இதழ் இது.
தினமணிச்சுடரை தினமணிக்கதிர் ஆக பெயர்மாற்றம் பெற்றது செல்லப்பாவினால்தான்..

ஹிந்துவை தோற்றுவித்தவர் ஜி.சுப்ரமணிய அய்யர்   ...........காரணம்,
முத்துசாமி அய்யர்தான் முதன் ஹைகோர்ட் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். 1878 ல்...ஆங்கில ஆட்சியில் ஒரு (இந்திய) கருப்பனை நீதிபதியாக வைத்து வெள்ளைக்கார வழக்கறிஞர்கள் எப்படி மைலார்ட் என அழைக்கமுடியும்? என்று அனைத்து பத்திரிக்கைகளும் கண்டித்து எழுத ....ஜி.சுப்ரமணிய அய்யர் உள்ளிட்ட 6 நண்பர்கள் மறுப்பு கடிதம் எழுத எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை.

எனவே நம் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டும் என்று எண்ணி இந்த கருத்தை வெளியிட 1878ம் ஆண்டு.1.75 ரூபாயில் 80 பிரதிகள் ஹிந்து என்ற பெயரில் வெளியிட்டனர்.   இதன் பின்னர் சுதேசமித்திரன் 1883ல் தோன்றியது சுதந்திர உணர்வைத் தூண்ட..... ஹிந்து என்ற ஆங்கிலபெயருடன் சுதந்திரப்போராட்டத்துக்கு பத்திரிக்கை கூடாது

########

சி.சுப்ரமணிய அய்யர் பெரியாருக்கு முன்னதாகவே 12 வயதான பால்ய விதவைக்கு மறுமணம் செய்வித்தவர் அப்போது பெரியாருக்கு வயது 10.   விதவை மறுமணம் செய்வித்த காரணத்தினால்
சாதிவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார். பெண்ணுரிமைக்கு பாடுபட்டவர்.

#########


1976 ல் சி.சு.செல்லப்பாவின் வீடு ஏலத்துக்கு வருகின்ற அன்று இந்த உரையாளார் கிருஷ்ணமூர்த்தி புத்தகம் விற்ற பணத்தை கொடுத்து அதை மீட்கிறார். அதுமட்டுமல்ல.. இதில் பெருமைபட ஒன்றும் இல்லை. இது என் பாக்கியம் என்கிறார். அப்படியெனில் இவரது ஞானாலயாவிற்கு உதவுவதும் நமக்குப் பாக்கியம்தான்...





ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற எண்ணத்தில்.. 
நிகழ்காலத்தில் சிவா


 மேலும் விபரங்களுக்கு..


ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140


 

Tuesday, 19 March 2013

இதோ வரலாறு பேசுகிறது... தேவகோட்டையில் ஞானாலயா

மு.வ அவர்கள்தான் தமிழ் புலவர்கள் வரலாற்றில் மணிவிழா கொண்டாடாத மாமனிதர். சென்னை பல்கலைகழகத்தில்  ஆங்கில நூல் எழுதி முதல்முதலாக டாக்டர் பட்டம் பெற்றவரும் மு.வ தான்..

அதுமட்டுமல்ல.. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தால் முதன்முதலாய் அழைக்கப் பெற்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டவர் மு.வ அந்த விசயத்தை பத்திரிக்கைக்குக் கூட தெரிவிக்கவில்லை.

அவரை விமானநிலையத்தில் வழியனுப்பக்கூட யாரும் வருவதை அனுமதிக்கவில்லை. மவுண்ட்ரோடு விமானநிலைய அலுவலகத்துக்குக்கூட யாரையும் அனுமதிக்கவில்லை.

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது நடுவண் அரசு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்தது. இந்தப்போராட்டம் தமிழுக்கென நடந்துகொண்டிருக்கும்போது எனக்கு பத்மஸ்ரீ பட்டம் வேண்டாம் என்று சொன்னவர் மு.வ.

முதன் நான்குநிமிட உரை இது

##########

திரு.மில்லரின் மாணவர் பரிதிமாற்கலைஞர். வீ.கோ.சூரியநாராயண சாஸ்திரி. தனக்கு பாடம் எடுத்த மில்லரிடம் ஆங்கிலகவிஞர் டென்னிசின் ஒரு கவிதையை குறிப்பிட்டு பாராட்ட.. இதைவிட சிறந்த கவிதை இதற்கு 9 நூற்றாண்டுக்கு முன்னரே வந்த  கம்பராமாயணத்திலிருந்து இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி மில்லர் தமிழ் குறித்து பெருமைப்படச் செய்தவர் இவரே பரிதிமாற்கலைஞர் எனப் பெயரை மாற்றிகொண்டவர்.

1960 வரை தமிழுக்கு பாடுபட்டவர்களில் பலர் தமிழில் பாண்டித்யம் பெற்றவர்கள் அனைவருமே வழக்கறிஞர்களாக இருந்து வந்தவர்கள்தாம்.
வ.உ.சி முதல் இரா.பி.சேதுப்பிள்ளை வரை..வையாபுரிப்பிள்ளை, சோமசுந்தர பாரதி வரை விரும்பி தமிழ்த் தொண்டு செய்தனர்.

@@@@@@@@@@

மறைமலை அடிகள் என்ற வேதாச்சலம், 17 வயதில்1892 திருவனந்தபுரம் பல்கலைகழகத்தில் பேசச் செய்தனர். 1896 இந்த மறைமலை அடிகளை அழைத்துவந்து கிருத்துவகல்லூரியில் தமிழ்துறையில் பணியாற்றப் பணித்தவர் பரிதிமாற் கலைஞர்.

தமிழ்ச் செம்மொழி முழங்கியவர் பரிதிமாற்கலைஞர். செந்தமிழ் என்ற மாத இதழ், அச்சகம், துவங்கியவர்.

&&&&&&&&&&

 தொடர்ந்து ....திருக்குறளில் பரிமேழலகர் உரை நெருடிய இடஙளைச் சுட்டிக்காட்டி இரா.பி.சேதுப்பிள்ளை மூன்று மணிநேரம் பேசினார்.   இவர்கள் சொல்லியதை எல்லாம் தன்கருத்தாக ஒருவர் (?) எழுதிஉள்ள அவலமும் உண்டு என்பதை ஞானாலயா சொல்லும்போது  இரத்தம் துடிக்கிறது.

****************

 தமிழை வாழவைத்தவர்களின் வரலாற்றுகளை பதிவு செய்வதில் தமிழ் சமூகம் செய்து வரும் தவறை திரு. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சுட்டிக்காட்டும் விதம் நம் அடிமனதைத் தொடும்.

அரசியல் சார்ந்து அல்லாது அனைவரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் அனுபவங்களை, தமிழ் அச்சுத் துறை சார்ந்த முழுவரலாறுகளை அச்சிலேற்றாமலே தவறவிட்டுவிடுவோம் போன்றதொரு நிலைமை இருப்பதை உணர்வோம்

இவற்றை ஆவணப்படுத்தும் விதமாக இந்த வலைதளம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தை வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல நமது பங்களிப்பு என்ன என்ற சிந்தனை இந்த .உரையைக் கேட்டால் உங்களுக்குள் பெருக்கெடுத்து வரும் என்ற உறுதியை அளிக்கிறேன்.





தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவை சார்பாக 9.03.2013 பேசிய உரை..

இதோ உங்களுக்காக...






ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற எண்ணத்தில்.. 
நிகழ்காலத்தில் சிவா

  உங்களின் கருத்துகளை தெரிவிக்கவும் என்ன உதவிகள் தேவைப்படும் என அறிந்து நேரடியாக உங்கள் பங்களிப்பைச் செய்யவும்..

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலம்

6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 

புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.



தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140




Saturday, 16 March 2013

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞானாலயா

நாளை ஞாயிறு 17/03/2013 காலை 10.30 முதல் 11.00 வரை புதிய தலைமுறை டிவியில்

 “களம் இறங்கியவர்கள்” என்ற தலைப்பில்

புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை ஒளிபரப்பாகிறது.

வாய்ப்பு இருக்கிறவர்கள் பார்த்து பயனடையுங்கள். அனைவருக்கும் தகவலைக் கொண்டு சேருங்கள்

  மேலும் விபரங்களுக்கு..


ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

Monday, 11 March 2013

புதுக்கோட்டை வரலாறு - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரை 03/03/2013

புதுக்கோட்டை பர்மாவில் இருந்து வந்து 1934 ல் ஒரு இலட்சம் முதலீடு செய்து தமிழ் பத்திரிக்கை உலகில் மறுமலர்ச்சியை தோற்றுவித்த வை.கோவிந்தன் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான்

 பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம்.
பாரி நூல்நிலையம்
வானதி திருநாவுக்கரசு
தமிழ்வாண்ன்
போன்றவர்கள்.  இவர்கள் எல்லோரும் வை.கோவிந்தன் அவர்களிடம் பணிபுரிந்தவர்கள்

அதுமட்டுமல்ல.. குழந்தைகளுக்கென தனி இதழ், மங்கையர்க்கென தனி இதழ்.,
தோற்றுவித்ததும் இவர்தான்


புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மட்டும் யுத்தகாலத்தில் அச்சகங்களுக்கான பேப்பர் கட்டுபாடு இல்லை.  ..

தொடர்ந்து புதுக்கோட்டை நகர வரலாற்று ஆதியோடு அந்தமாக தெரிந்துகொள்ள உரையைக் கேளுங்கள்



புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கடந்த 3.3.2013 அன்று நடந்த விழாவில் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இந்த உரை சுமார் ஒரு மணிநேரம் பத்துநிமிடம் ஓடக்கூடியது. பொறுமையாக கேட்டு அரிய விசயங்களை கேளுங்கள்.



ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற் எண்ணத்தில்..
நிகழ்காலத்தில் சிவா



Sunday, 3 March 2013

அணையா விளக்கு - பாரதி பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரை

செப்டம்பர் 15 ஞாயிறு  அன்று அணையா விளக்கு பாரதி என்ற பொருளில் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரையின் சில சுவாரசியமான பகுதிகள் இங்கே..

உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் 12 நாளில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார். இதற்கு முன்னதாக வேறு மொழிபெயர்ப்பு வந்திருந்தாலும் இதன் சிறப்பு என்னவென்றால் 80 பக்க முன்னுரைதான். அதில் ஆதிகவியான ஹேமரில் இருந்து சமகால கவியான தாமஸ் வரை சொன்னவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டு, திருக்குறள் காலம் கடந்த ஒன்றாக, வென்றதாக இருக்கிறது என்று தெளிவு படுத்தி இருக்கிறார். இந்த சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு அடக்குமுறைக்கு ஆட்பட்டுவிடாமல் தப்பிக்க பாண்டிச்சேரியில் இவரை அடைக்கலம் ஆக உதவியவர் பாரதி.
                                                     *   *  *  *
16 மொழி கற்றுத் தேர்ந்தவர் பாரதி, தமிழில்தான் எழுதவேண்டும், பேச வேண்டும் என்ற இருந்ததோடு பல செயல்திட்டங்களையும் வகுத்து செயல்படுத்தினார். அப்படி அறிவியல் சொற்களை தமிழ்படுத்துவது முடியாது என ஒருவர் சொல்ல, மெல்லத் தமிழ் இனி சாகும் என அந்த பேதை சொன்ன சூழல் என்ன ?  எட்டுத்திக்கும் செல்வீர் என்ற கவிதை பிறந்த வரலாறு அறிய உரையைக் கேளுங்கள் :)

                                                *      *      *

அன்னிபெசண்ட் அம்மையார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை தத்து எடுத்துக்கொண்டது வழக்காக மாறுகிறது. இதைப்பற்றி பாரதி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதற்கு 500 பிரதிகள் மொத்தமாக ஆர்டர் வருகிறது, அந்த ஆர்டரை பூர்த்தி செய்தால் பாரதி வீட்டில்  இரண்டுமாதம் அடுப்பெரியும். ஆனால் பாரதியோ முழுமையாக என்னை ஈடுபடுத்தி எழுதிய பாஞ்சாலி சபதத்தை வாங்க நாதியில்லை. பொழுதுபோக்காக எழுதியதை 500 பிரதிகள் கேட்டால் என்ன அர்த்தம். இல்லை என்று சொல்லிவிடு என்றார்.

காசுக்காக எதையுமே எழுதியதில்லை. எழுதியது எதையுமே காசாக்கவும் விரும்பியதில்லை பாரதி.  தொடர்ந்து படிக்க ஆர்வமா?

இதோ ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சேமிப்பில் இருந்த இந்த ஒலிப்பதிவை கேளுங்கள்...ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவாற்றல் சிறப்பினை அறியுங்கள். முடிந்தால் ஒருமுறை நேரில் செல்லுங்கள், நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கூடவே நூலகத்திற்கு எந்தவகையில் உதவமுடியும் என்றும் பாருங்கள்.



இந்த விபரங்கள் எல்லோருக்கும் சென்று சேர ஓட்டுப்பட்டைகளில் வாக்களியுங்கள். பேஸ்புக், கூகுள் பிளஸ், டிவீட்டர் போன்ற் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் வரும்காலத்தில் ஞானாலயா என்று தேடினால் இந்த பொக்கிஷங்கள் தேடுவோருக்கு கிடைக்கும். இதுவும் கூட நம் தமிழுக்கு நாம் செய்யும் தொண்டுதான்..




ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற் எண்ணத்தில்.. 
நிகழ்காலத்தில் சிவா


 மேலும் விபரங்களுக்கு..

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140


Monday, 18 February 2013

ஞானாலயாவைப் பற்றி தினகரன் 17/02/2013

இது எங்களின் தனிப்பட்ட சொத்தல்ல..சமூகத்துக்கானது..எல்லோரும் இதை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு எங்கள் பொறுப்பில் இலவசமாக தங்குமிட வசதிகளை செய்து தருகிறோம். நூலகத்தை பயன்படுத்துவதற்காக யாரிடமும் பணம் வாங்குவதில்லை. மனமுவந்து உதவுபவர்களிடம் பெற்றுக்கொள்கிறேன்- இது ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வார்த்தைகள்.. முழுபேட்டி தினகரன் வசந்தம் இணைப்பில் கீழே..
அடுத்த பக்கம்

ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற் எண்ணத்தில்.. நிகழ்காலத்தில் சிவா

Monday, 11 February 2013

கோவையில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள மையநூலக வாசகர் வட்டமும், விஜயா பதிப்பகமும் இணைந்து நடத்திய ஏழாவது சிந்தனை முற்றத்தில் பதிப்புத்துறை - அன்றும் இன்றும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 10.02.2013 காலை10.45 மணி அளவில்

அதில் திரு.செந்தலை ந.கவுதமன் கலந்து கொண்டு பேசினார். அந்த சுற்றுவட்டாரத்தில் அமைந்த சாலைகளின் பெயர்கள், அவை அமைந்த வருடம், காரணம், பெரியவர்களின் பெயர்களோடு அதன் பின்னணியில் உள்ளவர்களின் அரும்பணிகளை பட்டியலிட்டபோது மலைப்பாக இருந்தது.சிலிர்க்க வைத்தது என்றால் மிகையில்லை.

அடுத்து புதுக்கோட்டை ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களின் உரை முழுவதும் இரண்டு வீடியோக்களாக கொடுக்கப்பட்டுள்ளது.

உரை




தொடர்ச்சி



இதற்குப்பின் நாஞ்சில் நாடன் பேச் விழா நிறைவடைந்தபோது மணி மதியம் இரண்டு மணி.

புதுக்கோட்டை ஞானாலயா அய்யாவின் உரையை கேட்டால் தமிழ் புத்தகங்களின் இன்றைய நிலை தெளிவாகத் தெரியும். தமிழில் ஏறக்குறைய இவரிடம் இல்லாத முதல் பதிப்புப் புத்தகங்களே இல்லை எனலாம். இத்தகைய புத்தகங்கள் கொண்ட ஞானாலயாவை காப்பதற்கு கைகோர்ப்போம். நம்மால் இயன்றதைச் செய்வோம்.

நிகழ்காலத்தில் சிவா

Thursday, 6 December 2012

புத்தகங்களைத் தேடி ஒரு பயணம்

தமிழ் அச்சிடல் வரலாறு::


தமிழ் அச்சிடல் அறிமுகமும் வளர்ச்சியும் திருத்தூதுப் பணிக்காக இந்தியா வந்திருந்த சமயப் பரப்புரையாளர்களாலும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முயற்சிகளாலும் நிகழ்ந்தது.[1] 

இந்த தொடக்க கட்ட வளர்ச்சிக்கு முதன்மையாளர்களாக இயேசு சபை இறைப்பணியாளர்களும் பின்னர் சீர்திருத்தத் திருச்சபையின் போதகர்களும் இந்து அறிஞர்களும் குறிப்பிடப்படுகிறார்கள். 

புதிதாக குடிபுகுந்தவர்கள் உள்ளூர் மொழியின் முக்கியத்துவத்தினை உணர்ந்தவர்களாக தங்கள் சமய போதனைகளை உள்ளூர் மொழிகளில் பரப்ப எடுத்த முயற்சிகள் தென்னிந்தியாவில் நாட்டுமொழிகளில் அச்சிடும் பண்பாட்டை அறிமுகப்படுத்தியது. கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவ சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை என பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக்கலை மந்தமாகவே வளர்ச்சி பெற்றது.

இதனால் பெருந்தொகை இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயின. இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்ட ஆக்கங்கள் ஆகும்.



1865 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலான ”தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை” (Classified catalogue of Tamil printed books) 1865 வரை 1755 நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டதாக கூறுகிறது  முதல் தமிழ் புத்தகம் 1554ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள் லிசுபனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு ஆகியோர் ஆவர். இம்மூவரும் தமிழ் அறிந்த இந்தியர்களே என்றும் அவர்களுடைய கிறித்தவப் பெயர்களே நமக்குத் தெரிந்துள்ளன என்றும் அறிஞர் கருதுகின்றனர்.

கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha ē lingoa Tamul e Portugues) (தமிழில்: "தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு") என்னும் தலைப்பில் வெளியான அந்நூலில் தமிழ்ச் சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல்; ஐரோப்பிய மொழியிலிருந்து முதலில் மொழிபெயர்ப்பான தொடர் பாடம்;

இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று தமிழறிஞர் கமில் சுவலெபில் குறிப்பிடுகிறார்.  மதுரை போன்ற இடங்களில் செப்புப் பட்டயங்களிலும் கற்களிகளிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்திலேயே இந்தத் தமிழ் அச்சு வெளியீடு நிகழ்ந்தது. 

தமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் உருசியா (1563), ஆபிரிக்கா (1624) மற்றும் கிரீஸ் (1821) நாட்டு முதல் அச்சிட்ட நூல்களைவிட முந்தையதாக விளங்குகிறது.  சென்னையில் அச்சிடலுக்கு வித்திட்டவர் பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க் ஆவார்.

1578ஆம் ஆண்டிலேயே தென்னிந்தியாவில் அச்சு இயந்திரம் நிறுவப்பட்டபோதும் அடுத்து வந்த இறைப்பணியாளர்களின் அக்கறையின்மையாலும், குறிப்பாக ஆங்கில மற்றும் டச்சு ஆதிக்கம் மேலோங்கியதால் போர்த்துகீசியர் வலுவிழந்ததாலும் போர்த்துகீசியரின் அச்சுக் கூடங்களில் தமிழ் அச்சுப் பணி தொடரவில்லை. 

1612ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏறக்குறைய 50-60 ஆண்டுகளாக எந்தத் தமிழ் நூலும் அச்சாகவில்லை என்று தெரிகிறது. போர்த்துகீசிய அரசு ஆணைப்படி இந்திய மொழிகளில் அச்சிடுவது 1640களில் நிறுத்தப்பட்டது. 1649 முதல் 1660 வரை நோபிலியும் மனுவேல் மார்ட்டினும் எழுதிய பல ஆக்கங்கள் அச்சடிக்கப்படாது இருந்தன.

அச்சிட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை தற்காலிகமாகவே இருந்தன. காட்டாக சீகன்பால்க் நிறுவிய தரங்கம்பாடி அச்சகத்தில் தமிழறிஞர் வீரமாமுனிவரின் இலத்தீன்-கொடுந்தமிழ் இலக்கண நூல் 1739இல் அச்சேறியது. கேரளத்தில் அமைந்த அம்பலக்காடு என்னும் இடத்தில் இயேசு சபையினருக்கு உரித்தான அச்சகத்தில் ஒருசில தமிழ் நூல்கள் 1677-1679 அளவில் அச்சாயின.



1835 இல் கிழக்கிந்தியக் கம்பனியின் பதிப்புச் சட்டம் விலக்கப்பட்ட பின் இசுலாமிய தமிழ் நூல்கள் பதிப்புப் பெறுவது முனைப்புப் பெற்றது. அச்சுத் தொழில்நுட்பத்தால் முன்னர் எப்பவும் காட்டிலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இசுலாமிய படைப்பாக்கமும், நூல் பதிப்பும் விரிவு பெற்றது.[24] தமிழ் இசுலாமிய எழுத்தாளர்கள் கணிசமான அரபி மற்றும் பாரசீக சொற்களைப் பயன்படுத்தினர். இதனால் முசுலிம் இல்லாத வாசர்களை எட்டுவது சற்றுக் கடினமாக இருந்தது. மேலும் சிலர் அரபி எழுத்துக்களை தமிழ் எழுதப் பயன்படுத்தினர்.  

வேப்பேரி அச்சகம்: 

குடியேற்றவாத பெருநகரங்களில் அச்சிடுவதைப் பொருத்தமட்டில் சென்னை முதன்மையாக விளங்கியது. கிறித்துவ அறிவு வளர்ச்சிச் சமூகம் (Society for Promoting Christian Knowledge - SPCK) சென்னையின் புறநகர் வேப்பேரியில் 1726ஆம் ஆண்டு பெஞ்சமின் சுல்ட்சால் நிறுவப்பட்டது. இது தரங்கம்பாடியில் இருந்த திருத்தூது மையத்தின் விரிவாக செயல்பட்டது.  

முன்னதாக 1712ஆம் ஆண்டு இவ்வமைப்பு தரங்கம்பாடியில் கொடையாக நல்கியிருந்த தமிழ், தெலுங்கு வரிவுருக்களை தாங்கிய அச்சுப்பொறி அங்கு சீகன்பால்கிற்கு பதிப்பிக்க உதவியாக இருந்தது. இங்கிருந்துதான் மலபாரில் வாழ்கின்ற புற சமயத்தார் குறித்த பொது விவரணம் (A General Description Of Malabar Heathendom), நான்கு நற்செய்திகளும் திருத்தூதர் பணிகள் நூலும் (Four Gospels And Acts), மற்றும் சபிக்கப்பட்ட புற சமயத்தார் (Accursed Heathendom) பதிப்பிக்கப்பட்டன. தவிர 1715ஆம் ஆண்டில் புதிய ஏற்பாட்டின் தமிழாக்கமும் வெளியிடப்பட்டது.  

1761ஆம் ஆண்டில் பிரெஞ்சு காலனியாகிய புதுச்சேரியை ஆங்கிலப் படைகள் சேர் எய்ர் கூட் தலைமையில் தாக்கியபோது ஆளுனர் மாளிகையில் இருந்த அச்சுப்பொறியை கைப்பற்றினர்.[19] அப்பொறியின் இயக்குனர் டெலனுடன் அதனைச் சென்னைக்குக் கொண்டு வந்தனர். கிறித்தவ அறிவு வளர்ச்சிச் சமூகத்தின் யோகன் பிலிப் பாப்ரிசியசு செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூட்டிற்கு வாக்குறுதி தந்து அச்சுப்பொறியை வேப்பேரிக்கு கொணர்ந்தார்.

1762ஆம் ஆண்டிலேயே சமூகம் நாட்காட்டி யொன்றையும் தமிழ் நூல்களையும் அச்சடிக்கத் தொடங்கியது. இது கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் வெளியான நூல்களை விட பத்தாண்டுகள் முன்பாகவே வெளியானவையாகும்.



* Thanks to WIKIPEDIA*
படங்கள் உதவி - 4 Tamil Media.com

ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்காணல்.

Sunday, 28 October 2012

புதுக்கோட்டை ஞானாலயா நூலாலயம்! - விடுதலை தளத்தில்



புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வார்த்தைகளில்..

”முதல் பதிப்பு நூல்களைக் கொண்டு வரவேண்டும் என்கிற அவசியம் என்னவென்றால் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்கள் போடு கிறார்கள். 120 பக்கம் உள்ள ஒரு  நூல் அதே பெயரில் இப்போது வெறும் 45 பக்கங்கள் மட்டுமே இருக்கிறது. காலத்திற்கேற்றவாறு தங்கள் கருத் துகளை மாற்றி வெளியிடுகிறார்கள். அப்படி என்றால் அறிஞர் அண்ணா இந்த சமூகத்திற்கு என்ன சொல்லி வைத்தாரோ அது மறைக்கப்பட்டு விட்டன என்பதுதான் உண்மை. அவை எல்லா நூல்களிலும் நடந்து விடக்கூடும் என்பதால் முதல் பதிப்பு நூல்களைச் சேமித்து வைக்கிறேன்.
                                                     
நூல்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏனென்றால் அடுத்த தலைமுறைக்கு  நாம் விட்டு செல்வது இந்த புத்தகங்கள் மட்டும் தான். அடுத்து வரும் தலைமுறையினர் உறுதி யான வரலாறுகளை அறிந்திருக்க வேண்டும். அதற்கு என்னாலான முயற் சியே இந்த நூலகம். பெரும்பாலும் புகழ் பெற்றவர்கள் இதழ்களில் எழுதி யவையே பின்னாளில் புத்தகங்களாக வெளியிடுகிறார்கள். ஆனால் சிற்றி தழ்கள் அப்படி அல்ல.  சிற்றிதழ்களும் கருத்துப் பெட்டகங்கள்தான். அதனால் தான் அவற்றையும் சேமித்துப் பாதுகாத்து வருகிறேன்.”

                                                      *  *  *  *

மிகப் பெரிய நூலகத்தைக் கண்ட மகிழ்ச்சியுடனும், பார்த்து  வியந்த நெகிழ்ச்சியுடனும் நன்றி கூறி அங்கி ருந்து விடை பெற்றோம். இவ்வளவு அரிய பணியையும் ஏற்று தனது வயதுக்கு மீறிய பணிச்சுமையையும் ஏற்று தனது வருமானம் அனைத்தை யும் இந்த நூலகத்திற்கே செலவு செய்து நூலகத்தை நடத்தி வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவியார் டோரதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு நம்மா லான உதவிகளை ஒவ்வொருவரும் செய்ய முன்வர வேண்டும்.

விடுதலை தளத்தில் கட்டுரையின் சாராம்சத்தை படித்தீர்கள். விரிவான கட்டுரைக்கு கிளிக் பண்ணுங்க

Thursday, 25 October 2012

ஞானலயாவிற்கான ஸ்கேனர் முயற்சி

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்காக புதுக்கோட்டையில் ஒரு மருந்துக்கடை வைத்திருக்கும் லேனா என்று அழைக்கப்படும் இந்த நண்பர் ஒரு எளிய ஸ்கேனர் முன் மாதிரியைத் தானே வடிவமைத்திருக்கிறார்.

வெறும் பதினைந்து நாட்களில் ஒரு கார்பென்டரை உதவிக்கு வைத்துக் கொண்டு, திரு.லேனா இந்த முன்மாதிரியை உருவாக்கி இருக்கிறார்.மாதிரி ஸ்கேன்கள் நன்றாக, தெளிவாக இருக்கின்றன. இன்னமும் சில விஷயங்களை இணைக்க வேண்டும்.முக்கியமாக எல்ஈடி லைட்! இப்போது சென்னை மற்றும் பெருநகரங்களில் வாழ்கிற நண்பர்கள் பத்து வாட்ஸ் எல்ஈடி லைட் எங்கே கிடைக்கும், என்ன விலை என்பதைக் கொஞ்சம் விசாரித்துச் சொல்லி இந்த வேலையில் உதவ முடியும்.


                    (தான் தயாரித்த ஸ்கேனருடன் லேனா ஞானாலயாவில்..)

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்காக திரு லேனா வடிவமைத்துக் கொடுத்திருக்கிற ஸ்கேனரின் செயல் வடிவம் இது.Flatbed அல்லது V ஷேப் வடிவத்தில் 90-130 டிகிரி வரை சாய்வாக வைத்து ஸ்கேன் செய்யலாம். ஃபோகஸ் செய்வதற்கு உதவியாக உயரம் ஒன்றே முக்கால் அடியில் இருந்து மூன்றடி வரை வைத்துக் கொள்ள முடியும்.இங்கேயே நம்மால் செய்து காட்ட முடியும் என்பதை செயலில் நிரூபித்துக் காட்டியிருக்கும் திரு லேனா அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!


(ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா, நூலக உதவியாளர், ஸ்கேனர் உடன்)


புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் உதவிக் கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.நிதி வேண்டும்! நிதி மட்டுமே உதவாது! தகுந்த தொழில்நுட்ப உதவியும், மின்னாக்கம் செய்வதில் ஆர்வத்துடனுதவக் கூடிய நபர்களைப் புதுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் கண்டறிவது, என்று நிறைய வேலைகள் காத்திருக்கின்றன. திரு லேனா, ஞானாலயாவுக்கு உதவுவதில் ஒரு முன்னெட்டு என்று சொல்வதை விட, ஒரு புலிப்பாய்ச்சல் என்றே சொல்ல வேண்டும், சாதித்துக் காட்டியிருக்கிறார்! நீங்களும் பங்கெடுத்துச் செய்யலாமே!

Tuesday, 10 July 2012

ஞானாலயா!புத்தகங்களே வாழ்க்கையாக ஒரு அறிவுத்திருக்கோவில் உருவான விதம்!

17-10-1999 தேதியிட்ட கல்கி வார இதழில் ஞானாலயா வளர்ந்து உருவான விதம் சொல்லப்பட்டிருக்கிறது! படங்கள் மீதுக்ளிக் செய்து பெரிதாக்கிப் படித்துப் பார்க்கலாம்!ப்ளாக்கரில் இருந்த ஒரு தொல்லையை, ஒரு விட்ஜெட் வழியாக நீக்க உதவி செய்த திரு தனபாலன், சசிகுமார் இருவருக்கும் நன்றி! இப்போது, ஸ்கேன் இமேஜ் மீது க்ளிக் செய்தால் அந்தப்பக்கம் தனியாகத் தோன்றும், கர்சரில் பெரிதாக்கிப் படிக்க பூதக்கண்ணாடி மாதிரி ஒரு ஆப்ஷன் வரும்.சிரமமில்லாமல் படிக்க உதவியாக இருக்கும்.

நண்பர்களுக்கு நன்றி!



கல்கி வார இதழுக்கும், கட்டுரை ஆசிரியர் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு அவர்களுக்கும் நன்றியுடன்! 


..

Sunday, 8 July 2012

ஞானாலயாவுக்கு உதவுவதும் காலத்தின் குரல்தான்!



இந்தவாரம்-கலாரசிகன் பகுதியில் நேற்றைய (08-07-2012) தினமணி நாளிதழில் நின்று போன கணையாழி மீண்டும் தொடங்கிய கதையில் ஆரம்பித்து, மார்க்சீயத் திறனாய்வாளரும்,சிறந்த எழுத்தாளருமான தி.க.சிவசங்கரன்  மிகுந்த அபிமானத்தோடு தி க சி என்றழைக்கப் படுகிறவருடைய  கட்டுரைகள் அத்தனையையும் தொகுத்து  காலத்தின் குரல் என்ற தலைப்பில் கவிஞர் முத்துக்குமார் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார் என்ற செய்தியோடு, தி.க.சியின் கட்டுரைகளைப் பல இடங்களிலும் தேடிக் கிடைக்காத நிலையில், புதுக்கோட்டை ஞானாலயாவில் அத்தனை கட்டுரைகளும் கிடைத்ததைத் தன்னுடைய முன்னுரையில் திரு முத்துக் குமார் குறிப்பிட்டிருப்பதாகவும் ஒரு செய்தி இருக்கிறது.

ஞானாலயா ஆய்வு நூலகத்தில் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் இருக்கின்றன. அதை நடத்தியவர்களிடமே  பிரதி ஏதுமில்லாத நிலையில்,ஆய்வு செய்ய விரும்புகிறவர்களுக்கும், வாசகர்களுக்கும், மறுபதிப்பு செய்ய விரும்பும் பதிப்பகங்களுக்கும் இன்றியமையாத துணையாக ஞானாலயா திரு.பா.கிருஷ்ணமூர்த்தி இருந்து வருகிறார். 


ஞானாலயா ஆய்வு நூலகத்தின் தேவை, அவசியம் என்ன, அதைப் பாதுகாப்பதற்கான அவசியம், அவசரம் என்ன என்ற கேள்விக்குப் பதிலாக கலாரசிகனுடைய இந்த செய்திக் கட்டுரையின் பகுதி இருக்கிறது!


இனி அந்தக் கட்டுரையின் அந்தக் குறிப்பிட்ட பகுதி இங்கே!  

முழுக்கட்டுரையும் இங்கே 


"கணையாழி' இதழ் பற்றிக் குறிப்பிட்ட கையோடு, அடுத்த செய்தி. "கணையாழி' இதழில் 1999-ஆம் ஆண்டில் தி.க.சி. எழுதி வந்த கட்டுரைகளை, கவிஞர் முத்துக்குமார் "காலத்தின் குரல்' என்ற பெயரில் தொகுத்திருக்கிறார். 

இதற்கு முன்னால், "தி.க.சி. நேர்காணல்கள்' என்கிற தொகுப்பிற்காகக் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு இந்தக் கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி கிடைத்ததாகவும், பிறகு புதுக்கோட்டை "ஞானாலயா' ஆய்வு நூலகத்தின் உதவியுடன் எல்லா கட்டுரைகளும் கிடைக்கப் பெற்றதாகவும் தன்னுரையில் குறிப்பிடுகிறார் முத்துக்குமார்.  

நம்மிடையே வாழும் பத்திரிகை உலக ஜாம்பவான் தி.க.சி. அவரைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கும் தகுதி அனுபவத்தாலும், பங்களிப்பாலும் நம்மில் யாருக்கும் கிடையாது என்பது எனது தேர்ந்த முடிவு. இலக்கிய உலகின் கிரியா ஊக்கியாகக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.

நிஜமாகவே அவரது கருத்துகள் காலத்தின் குரல்தான்! கல்கி, புதுமைப் பித்தன், சி.சு.செல்லப்பா, "சரஸ்வதி' விஜயபாஸ்கரன், "தினமணி' டி.எஸ். சொக்கலிங்கம், கவிஞர் கே.சி.எம். அருணாசலம், சிட்டி, வல்லிக்கண்ணன்,  சுந்தர ராமசாமி என்று இலக்கிய உலக முன்னோடிகள் பலருடனும் உலவும் உணர்வைத் தந்தது "காலத்தின் குரல்' தொகுப்பு.  ÷காலத்தின் குரல், காலா காலமாகக் கேட்டுக் கொண்டே இருக்கப் போகும் ஓர் இலக்கியவாதியின் குரல்!" என்று அந்த செய்தி ஒரு முத்தாய்ப்புடன் முடிகிறது!

இந்த ஒரு தொகுப்பு மட்டுமல்ல, இதைப்போன்ற நிறையப் படைப்புக்களையும், படைப்பாளி, பதிப்பகம், வெளிவந்த காலச் சூழல், வாசகர்களிடம் இருந்த வரவேற்பு இப்படி எல்லாத்தகவல்களையும் ஒருசேரத் தன்னகத்தே கொண்டிருக்கிற ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கு உதவிக் கரங்கள் நீட்டுவதும், 

ஞானாலயா திரு கிருஷ்ண மூர்த்தியிடம் இருக்கிற வாய்மொழி சரித்திரத்தையும் ஆவணப்படுத்த வேண்டியதும், பாதுகாப்பதும் கூட காலத்தின் குரலாக, வரலாற்றுப் பிரக்ஞையாக இருக்கிறதே! 

Thursday, 5 July 2012

தமிழால் இணைவோம்- ஞானாலயா புதுக்கோட்டை

 புதுக்கோட்டை ஞானாலயா என்கிற நூலகத்தைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தமிழகத்தின் தனியார் நிர்வகிக்கும் நூலகங்களில் இரண்டாவது பெரிய நூலகம் என்கிற பெருமையைப் பெற்றது.முதலிடத்தில் இருந்த மறைமலை அடிகள் நூலகம், சரியாகப் பராமரிக்கப்படாமல்,முக்கால் பங்கு சேகரங்கள் கரையான் அரித்து மீதம் உள்ளவை கன்னிமாராவில் அடைக்கலமாகி விட்டது. இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தனியார் நூலகம் ஞானாலயா ஒன்றாகத்தான் இருக்க முடியும்! வெறும் புத்தகங்கள் எண்ணிக்கையில் மட்டுமல்ல, சில விசேஷத் தன்மைகளோடும் கூட !

சென்னை ரோஜா முத்தையா நூலகத்தை பயன்படுத்தி பத்துக்கும் குறைவானவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்ற தகவலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் புதுக்கோட்டை ஞானாலயாவின் உதவியோடு சுமார் 75 பேருக்கும் மேல் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்ற தகவல் ஞானாலயா ஆராய்ச்சி செய்பவர்களுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்திருக்கிறது என்பதை சொல்லும்.

அது தவிர மாநிலத் தலைநகர் சென்னையில்கன்னிமாரா உட்படப் பலப்பல நூலகங்கள் இருந்தும் கூட, ஞானாலயாவைத் தேடி புதுக்கோட்டைக்கு வந்து ஆராய்ச்சியாளர்களும், எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் படியெடுத்துச் செல்கிறார்கள் என்றால், அது ஞானாலயாவில் எப்படி தலைப்பு வாரியாக, அரியவகைப் புத்தகங்களை முறையாகத் தொகுத்து வைத்திருக்கிறார்கள், வைத்திருக்கிறார்கள், பாதுகாத்துவருகிறார்கள் என்பது தான்  விசேஷம், வித்தியாசமே!



இந்த நூலகத்தை உருவாக்கி காத்துவரும் கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்  தங்களுக்குப் பின் இந்த தமிழ் சமுதாயத்திற்கு தாங்கள் காத்து வரும் தமிழ்நூல்களின் பொக்கிஷத்தை குறைவற கொடுத்து செல்லவே விரும்புகின்றனர்.

அதற்கு நாம் செய்ய வேண்டியது, வருங்கால தலைமுறைக்கு செய்ய வேண்டியது, நூலகத்தை காத்து நடத்த கரம் கோர்ப்பதுதான்.


செய்ய வேண்டிய பணிகளாக நம் முன்னே இருப்பது .....

முதலாவதாக, அங்கே இருக்கும் அரிய சேகரத்தை மின்னாக்கம் செய்கிற பணி அதற்குத்தேவையான தன்னார்வலர்களைப் புதுக்கோட்டையில் கண்டறிவது, அவர்களை ஒருங்கிணைப்பது. அவர்களுக்கு மின்னாக்கம் செய்வதில் பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதற்கும், சில தொழில்நுட்ப உதவிகளுக்கும் உள்ளூரிலேயே தகுந்த நபர்களை அடையாளம் காணும் முயற்சி தொடங்கி இருக்கிறது.

 இரண்டாவதாக சில ஸ்கேனர்கள், கணினிகள்  இவைகள் இப்போது வேலையை செய்வதற்கு என்று ஆரம்பித்தாலும், பின்னால் ஒரு செர்வர் ப்ளஸ் நோடுகளாக மாற்றி, படிப்பதற்கு, ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எடுத்துக் கொள்வதற்குமான சாதனங்களாகவும் வைத்துக் கொள்வதற்கான அடிப்படைக் கட்டமைப்பு அதற்கான  நிதி ஆதாரங்களைத் திரட்டுவது.

 மூன்றாவதாக, பெருகி வரும் சேகரங்களைப் பாதுகாப்பதற்காக, மாடியில் தொள்ளாயிரம் சதுர அடியில் உத்தேசித்திருக்கும் கட்டிட விரிவாக்கத்துக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது. நல்லெண்ணம் கொண்ட ஒரு நண்பர் அச்சாரமாகக் கொடுத்திருக்கும் ஒருலட்சரூபாயுடன், இந்த வேலை ஆரம்பமாகி விட்டது.சுமார் எட்டரை-ஒன்பது லட்சம் மதிப்பீட்டிலான இந்த வேலை தொய்வில்லாமல் நடப்பதற்கு, உதவிக்கரங்கள், நேரத்துடன் நீண்டாக வேண்டும்.


நான்காவதாக, திரு பா.கிருஷ்ணமூர்த்தியிடம் இருக்கும் புத்தகங்கள், புத்தக ஆசிரியர்கள், பதிப்பகங்கள் குறித்த தகவல்களை ஆவணப் படுத்துவது

இதுவரை ஞானாலயாவைக் குறித்து வெளியாகியிருக்கும் தகவல்களை ஒரே இடத்தில் பார்க்கும் விதத்தில் ஒரு வலைப்பூ தொடங்கப் பட்டிருக்கிறது.

http://gnanalaya-tamil.blogspot.in/   இந்த வலைப்பக்கங்களை புக்மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள். . ஒரு நல்லபணிக்கு உங்களால் ஆனவரை உதவுங்கள்!

ஆரம்பத்திலேயே சொன்னதைப் போல, நிதியுதவி முக்கியம் தான்! ஆனால் வெறும் பணத்தினால் மட்டுமே சாதிக்கக் கூடிய பணி இல்லை இது! மனித உழைப்பும் அதிகமாகத் தேவைப்படுகிற பணி இது! புத்தகத்தை நேசிக்கிறவர்கள்,  மரபுகள், பண்பாடு, வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருப்பவர்கள், கருத்துத் திருடர்களிடமிருந்து, உண்மையைப்பாதுகாக்கும் ஆர்வமுடையவர்கள் என்று பலவிதமான ஆர்வலர்களும் ஒன்று கூடித் தேர் இழுக்கும் உன்னதமான பணி இது.

தொடர்புக்கான முகவரி, மற்றும் நிதி அனுப்புவதற்குத் தேவையான விவரங்கள்:

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா,
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்:  04322-221059
மொபைல்:     +91 9965633140

e-mail: gnanalayapdk@gmail.com

வங்கி விவரம்:

Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
IFS CODE: UCBA0000112

 

Wednesday, 4 July 2012

'உலகம் சுற்றும் தமிழர்’ ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் சொற்சித்திரம்!



'உலகம் சுற்றும் தமிழர்’ என்றவுடன் நம் நினைவுக்குச் சட்டென வருபவர் - அ.கரு.செட்டியார் என்னும் பெயருடைய ஏ.கே.செட்டியார் அவர்களே. இவர் உலகத்தைச் சுற்றியது எதற்காக? பயணம் செய்து பல நாடுகளைப் பார்த்து மகிழவேண்டும் என்பதற்காகவா?

இல்லவே இல்லை; வாழ்விக்க வந்த காந்தி மகாத்மாவின் வரலாற்றுக்குரிய வாழ்க்கைச் சம்பவங்களைச் செய்திப் படமாக்கிச் சிறப்பிக்க வேண்டும் என்ற தணியாத ஆவலே இவரைத் தரணியை வலம் வரச் செய்தது.



‘உலகத்தினர் இந்தியாவை மதிப்பதற்குக் காரணமே காந்தியடிகள்தான்’ என்ற கருத்தை அவர் அறிந்து வைத்திருந்ததினாலேதான் இவர் காந்தியைப் பற்றிய செய்திப்படம் தயாரிக்க உலகம் முழுதும் சுற்றினார். ‘‘உலகம் சுற்றும் தமிழன்’’ என்ற பயண நூலையும் எழுதினார்.

மேல்நாடு என்றால் இங்கிலாந்து மட்டுமே என்றிருந்த பிரிட்டிஷ் அரசாட்சிக் காலத்தில் அமெரிக்காவிற்குப் போய்வந்த புரட்சிவீரர் இவர். கொழுத்த பணக் காரர்கள்தான் மேல்நாடு பயணம் செய்ய முடியும் என்கின்ற காலகட்டத்தில்-சராசரி வகுப்பைச் சேர்ந்த செட்டியார் வெற்றிகரமாக உலகைச் சுற்றி வந்தது ஒரு சாதனையே.

இந்திய அரசு செய்திப்படம் ஒன்று எடுப்பதற்கு முன்னரே மகாத்மா காந்தியைப் பற்றிய புகைப்படங்களை எல்லாம் பாடுபட்டுச் சேகரித்து டாக்குமெண்டரியாகத் தொகுத்த முன்னோடி. 

‘குமரிமலர்’ என்ற மாத இதழை இலட்சியப் பிடிப்போடு 40 ஆண்டுகள் நடத்திய பத்திரிகையாளர். இப்படி இவர் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.இவர் பிறந்தது 3.11.1911 இல் கோட்டையூரில்; இவர் மறைந்தது 10.9.1983 இல் சென்னையில். பள்ளிப் படிப்பு 8 ஆண்டுகள் (1920 - 1928) திருவண்ணாமலையில் இரங்கூனில் ‘தனவணிகன்’ என்ற இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று குறைந்த காலம் பணியாற்றினார். இளமையிலேயே தமிழில் கதை,கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவராகத் திகழ்ந்தார்.

1928 இல் எஸ்.எஸ்.வாசன் நடத்திய ஆனந்த விகடனில் ‘சாரதாம்பாள்-சிறுதமாஷ்’ என ஒரு சிறுகதையை இவர் எழுதினார். இவர் எழுதிய முதல் கதையும் இதுதான்;கடைசிக் கதையும் இதுதான்.ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த கதையைத் தழுவி அதனை எழுதினார்.

1936 ஆம் ஆண்டு, புகைப்படப் படிப்பின் பொருட்டு ‘ஜப்பான்’ சென்றார். படிப்பு முடிந்ததும் ‘பர்மா’ வந்தார். அப்போதுதான் தமது முதல் பயண நூலான ‘ஜப்பான்’ என்ற நூலை இவர் எழுதி இரங்கூனில் வெளியிட்டார். பின்னர் இந்த நூல், ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்டது.

இந்த நூலின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அமெரிக்கா சென்றார். அங்கே பகுதி நேர வேலை செய்து புகைப்படத் தொழில் பற்றிய மேல் படிப்பைத் தொடர்ந்தார். தமது ஜப்பான் பயண அனுபவத்தை நூலாக எழுதினார்.


தமது முதல் நூலான ‘ஜப்பான்’ முன்னுரையில் ‘‘ஒரு நாட்டைப் பற்றி எழுதுவது என்றால் - அந்நாட்டில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் தங்கி, அந்நாட்டு மொழியை நன்கு பயின்று, அந்நாட்டு மக்களோடு நெருங்கிப் பழகுதல் வேண்டும். ஆனால், நான் ஜப்பானில் தங்கி இருந்தது ஒரு மாத காலம்தான். நுனிப்புல்லை மேய்வது போன்ற இந்நிலையில், நான் அதிகம் எழுத முடியாது என்றாலும்,ஜப்பானைப் பற்றித் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தாலேயே இந்நூலை எழுத முன் வந்தேன்!’’ என்று திறந்த மனத்தோடும் பொறுப்புணர்ச்சியோடும் இவர் எழுதினார்.

2.10.1937 இல் - நியூயார்க்கிலிருந்து டப்ளினுக்கு ‘சமரியா’ என்னும் கப்பலில் இவர் பிரயாணம் செய்தார். அப்போது, கப்பலில் பிரயாணம் செய்தவர்கள் காந்திஜியின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். 2.10.1937 என்பது காந்தியின் 68வது பிறந்த நாள் ஜெயந்தி அல்லவா!

இந்த காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட இவருக்கு,அப்போது ஒரு எண்ணம் உதித்தது. ‘புகைப்படத் தொழில் படிப்புப் படித்தவனாகிய நான், ஏன் காந்திஜி பற்றிய செய்திப்படம் ஒன்றைத் தயாரிக்கக் கூடாது?’ இந்த எண்ணம் இவருக்குத் தோன்றியவுடன் இவருக்கு காந்திப் பைத்தியம் பிடித்துவிட்டது.

அதே நினைவாக மூன்றாண்டுகள் உழைத்தார்.இந்தியாவைச் சுற்றிப் பல முறைகள் பயணம் செய்தார். உலகத்தின் பாதி நாடுகளுக்குக் கப்பலில் பயணம் செய்தும்,விமானத்தில் சுற்றிப்பறந்தும் வந்தார். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பயணம் செய்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட செய்திப்பட கம்பெனிகளுக்குச் சென்று வந்தார். அவர்களோடு கலந்து ஆலோசித்தார்.

இப்படியாகக் கடுமையாக உழைத்து - முதலில் 50,000 அடி காந்திப்படம் எடுத்தார். பிறகு அதிலிருந்து 12,000 அடியில் காந்தி செய்திப் படத்தை உருவாக்கினார்.

இப்படத்தைத் தயாரிக்க நான்கு கண்டங்களில் இவர் இலட்சம் மைல் பிரயாணம் செய்தார்;பற்பல செய்திப் பட கம்பெனிகளில் ஏறி இறங்கினார்; ஒரு நூறு கேமராக்காரர்கள் எடுத்த படங்களைச் சேகரித்தார்.

ரோமன்ரோலந்து, போலிக் போன்றவர்களைப் பேட்டி கண்டார். காந்தி பற்றிய உலக அறிஞர்களின் கருத்தைக் கேட்டறிந்தார். அவற்றையெல்லாம் உரிய இடத்தில் இணைத்து ‘மகாத்மா காந்தி’ செய்திப்படத்தை 24.08.1940இல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முதலில் வெளியிட்டார். இந்தப் படத்தை 1952 இல் மீண்டும் ஆங்கிலப் பின்னை உரையுடன் தயாரித்தார். காந்தியின் புகழைப் பரப்பினார்.

மகாத்மா காந்தி உடலுடன், உயிருடன், உள்ளத்துடன் வாழ்ந்தபோது, அவருக்குச் செலுத்தப்பட்ட ஒரு தமிழனின் மகத்தான காணிக்கையாக இச்செய்திப் படம் ஏ.கே.செட்டியாரால் இந்தியாவிலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டது.இதற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளலாம்.
இத்தகு சாதனையைச் செய்த செட்டியாரின் நூற்றாண்டு விழாவினை மத்திய அரசும்,மாநில அரசும் கொண்டாட வேண்டும் என்பதை அரசியல்வாதிகளுக்கு நான்,அப்போதைக்கு இப்போதே நினைவுபடுத்துகின்றேன். 2011இல் இவருடைய நூற்றாண்டு வருகிறது அல்லவா!

மகாத்மா காந்தி பற்றிய செய்திப்படத்தை எடுப்பதற்காகவே உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தார். அதன் விளைவே இவர் பயண நூல்கள் பலவற்றை எழுதக் காரணமாக அமைந்தது. பயண நூல்களின் முன்னோடியாக இவர் போற்றப்படுகிறார்; புகழப்படுகிறார்.


ஆம்! "இன்று எத்தனையோ விதமான பயண நூல்கள் வெளியாகின்றன. ஆனால், இலக்கியமாய் மதிக்கக் கூடிய பிரயாண நூல் வடிவெடுத்தது சந்தேகமின்றி ஏ.கே.செட்டியாரின் பேனாவில் தான் என்பதைப் பாரபட்சமில்லாத நெஞ்சங்கள் ஒப்புக்கொள்ளும்!"என்று அறிஞர் கி.சந்திரசேகரன் எழுதுகிறார்.

மாதப்பத்திரிகையான ‘குமரிமலர்’ தோன்றியது இரண்டாம் உலகப் போர்க் காலமான 1943இல். அந்நாளில் புதிதாக பத்திரிகை தொடங்க ஆங்கில அரசு அனுமதிக்காது என்பதனால் இங்கிலாந்து நாட்டில் வெளியான  பெங்குவின் ரீடர்  கட்டுரைக் களஞ்சியத்தைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ‘குமரிமலர்’ மாதம் ஒரு புத்தகமாக மலர்ந்தது.

தமிழில் முதன்முதலாக போட்டோ ஆப்செட் முறையில் படங்களையும், விளம்பரங்களையும் - அசோசியட் பிரஸ்ஸின் உதவி கொண்டு குமரிமலர் - தனது ஆண்டு மலரில் வெளியிட்டது. உலக மகாயுத்தத்தின் காரணமாக தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் திருக்கழுக்குன்றத்தில் வசித்த போது,அவருடைய அருமையான புகைப்படத்தை குமரிமலர் வெளியிட்டது. ஐயர் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் அதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘குமரிமலர்’ 1943 ஏப்ரல் முதல் 1983 ஏப்ரல் வரை ஏறக்குறைய 40 ஆண்டுகள் நடைபெற்றது. இடையில் 1.4.1945 முதல் 1.1.1946 வரை குமரிமலர் வெளிவருவது தடைப்பட்டது.மீண்டும் 1.2.1946 இல் வரத்தொடங்கியது. ஏ.கே.செட்டியார் வெளிநாடு சென்றபோது, அறிஞர் வெ.சாமிநாத சர்மா ஆசிரியப் பொறுப்பேற்று குமரிமலரை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் சுற்றிய தமிழரான ஏ.கே.செட்டியார் எழுதிய நூல்கள் இருபதிற்கு மேலாகும்.அவற்றில் சக்தி கோவிந்தன் பதிப்பகத்தாராலும் மற்றும் டி.வி.எஸ்.நிறுவனத்தாராலும் சில நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இனி இவர் எழுதிய நூல்களின் பட்டியலைக் காண்போம்.

1. ஜப்பான் (1936), 2. திரையும் வாழ்வும் (1943), 3. பிரயாணக் கட்டுரைகள் (1947), 4. மலேயா முதல் கானடா வரை (1955), 5. அமெரிக்க நாட்டில் (1956), 6. கரிபியன் கடலும் கயானாவும் (1957), 7. உலகம் சுற்றும் தமிழன் (1958), 8. அண்டை நாடுகள் (1958), 9. ஐரோப்பா வழியாக (1961), 10. இட்டபணி (1962), 11. குடகு (1967), 12. புண்ணியவான் காந்தி (1969).

பின்வருபவை சக்திமலர் வெளியீடுகள்.இவை சக்தி வை.கோவிந்தனால் வெளியிடப்பட்டவை ஆகும்.

1. ஜப்பான் (1940),

2. உலகம் சுற்றும் தமிழன் (1940),

3. அமெரிக்கா (1940) பின்வருபவை - இலவச வெளியீடுகளாக டி.வி.எஸ்.நிறுவன உதவியுடன் பள்ளி,கல்லூரி நிறுவனங்களுக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன.

1. உணவு, 2. பண்பு, 3. கொய்தமலர்கள், 4. அவ்வையார்

பின்வருபவை - ஏ.கே.செட்டியாரால் விழாக்களின் போது தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவை. இவைகளும் இலவச வெளியீடுகளே ஆகும்.

1. புத்தகம், 2. திருமணம்

இவற்றைத் தவிர - ஏஷியன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் - என்ற சென்னை நிறுவனம் இவருடைய தொகுப்பு நூலான ‘பயணக்கட்டுரைகள்’ என்ற நூலை 15.08.1968இல் வெளியிட்டுள்ளது. சென்ற 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பற்றி தமிழர் எழுதிய 140 பயணக் குறிப்புகளையும், கட்டுரைகளையும், பாடல்களையும் பழைய தமிழ் நூல்களிலிருந்தும், தமிழ் பத்திரிகைகளிலிருந்தும் இயன்ற அளவு திரட்டி இந்நூலில் ஏ.கே.செட்டியார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேயா முதல் கானடா வரை

இந்த நூல் ஏப்ரல் 1955 இல் வெளிவந்தது, 231 பக்கங்கள். நாற்பது மாதங்கள் வெளிநாடுகளில் பயணம் செய்த செட்டியார்,நான்கு புத்தகங்கள் வெளியிட எண்ணினார். இந்த நூலை முதலில் எழுதினார். தனது நண்பர்கள் வீட்டில் தங்கியபோது, திருப்பூரில் இந்த நூலை எழுதினார்.

உலகத்தின் பல நாடுகளில் பிரயாணம் செய்த போது ஜாதி, மதம், நிறம், மொழி என்கின்ற பேதம் இல்லாமல்,மனிதனை மனிதனாக நினைத்து, மதித்து,அன்போடு உபசரித்து,அரிய உதவிகள் புரிந்து எண்ணற்ற அன்பர்களுக்கு நன்றி.எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவனின் அருளுக்கு நன்றி என இந்த நூலின் முன்னுரையில் இவர் எழுதியுள்ளார்.

கரிபியன் கடலும் கயானாவும்

நாற்பது மாதங்கள் வெளிநாடுகளில் பயணம் செய்த செட்டியார் அந்த அனுபவம் பற்றி நான்கு நூல்கள் எழுதத் திட்டமிட்டார் அல்லவா? அந்த வரிசையில் மூன்றாவதாக எழுதப்பட்ட புத்தகம் இது.இதை 14.03.1957இல் வெளியிட்டார். 92 பக்கங்கள்; 16 படங்கள் தமது நூல்களில் படங்கள் இல்லாமல் செட்டியார் எந்த நூலையும் வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூலில் கயானாவைப் பற்றியும்,அங்கு ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புக்குக் காரணமான பின்னணிச் சம்பவங்களையும் விளக்கமாக எழுதியுள்ளார். கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் வாழும் நமது மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவே இப்புத்தகங்களை எழுதியதாக ஏ.கே.செட்டியார் கூறுகிறார்.

பஹாமத்தீவுகள் - ஜமைக்கன் - பார்படோஸ் - டிரினிடாட் - பிரிட்டிஷ் கயானா - சூரிணம் - வெனிஸுவோல் ஆகிய பகுதிகளைப் பற்றி விரிவாகவும் அங்குள்ள தமிழர்கள் பற்றியும் சுவைபடக் கூறுகிறார்.

மலேயா - இந்தோனேஷ்யா - பாலித்தீவு ஜோக்ள காந்தா சுமத்ரா - ஆஸ்திரேலியா - பிஜித்தீவு - கானடா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட அனுபவங்களையும், அங்கு தாம் கண்ட காட்சிகளையும், மக்களின் நடை, உடை, பாவனை, உணவு, பழக்க வழக்கங்களையும் விரிவாக எழுதியுள்ளார்.

இந்த நூலுக்கு வேறு எந்த நூலுக்கும் எழுதாத அளவு பதினேழு பக்கங்கள் மிக நீண்ட முன்னுரையை இவர் எழுதியுள்ளார்.இந்நீண்ட முன்னுரையானது இப்பயணங்களின் முக்கியத்துவத்தையும் இவர் கொண்ட பெருமிதத்தையும் வெளிப்படுத்துகின்றன என்றே சொல்லலாம்.

‘‘இப்புத்தகத்தில் உள்ளதெல்லாம் உண்மை என்று சொல்ல வேண்டாம். என்னால் காணப்பட்ட காட்சிகளே ஆகும். ஒவ்வொருவரும் உண்மையைத் தத்தமக்குத் தெரிந்தவாறு உணருகின்றனர். உண்மையை வரையறுத்துக் கூறுவது கடினம். கடவுள் ஒருவரே உண்மை!’’ என்று இவர் கூறுகிறார்.

இந்த வையத்தில் எத்தனையோ பேர் பிறந்து மறைகிறார்கள். ஆனால் ஒரு சிலரே தாங்கள் வாழ்ந்த காலத்தின் அடிச்சுவடுகளைப் பிறருக்குப் பயன் படும்படியாக விட்டுச் செல்கிறார்கள். அப்படி எண்ணக்கூடிய சிலரில் ஒருவர் புண்ணியவான் ஏ.கே.செட்டியார் அவர்கள்.

சுய விளம்பரத்தை என்றுமே விரும்பாத இவர் தமது புகைப்படத்தைக் கூட பத்திரிகைகளுக்குத் தந்ததில்லை. புகழையும் வேண்டாத புனிதராகப் பொலிந்தார். இப்பேர்ப்பட்ட மாமனிதர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து என்னுடன் பழகினார் என்பதும், எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பதும் பெருமை தரும் செய்திகள் ஆகும்.

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் பண்பாட்டுப் புலத்தில் ஏ.கே.செட்டியார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட கட்டுரை.

கட்டுரையாளர் புதுக்கோட்டை ஞானாலயா நூலக நிறுவனர் திரு பா.கிருஷ்ணா மூர்த்தி 

Thanks and Courtesy: http://nermai-endrum.blogspot.in/2010/12/blog-post_1249.html 

 ஏ.கே  செட்டியாரைப் பற்றி, அவருடைய காந்தி ஆவணப்படத்தைப் பற்றி   ஒரு செய்தி ஹிந்து  நாளிதழில்  

 

ஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி


பயண வசதிகள் மிகக் குறைவாக இருந்த அந்த நாட்களிலேயே, உலகம் சுற்றிய தமிழர் என்று வியந்தோதப்பட்டவர் கருப்பன் செட்டியார் என்கிற ஏ.கே செட்டியார்.உலகத்தின் பல நாடுகளுக்கும் பயணம்செய்து,தமிழில் பயணக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். குமரி மலர் என்ற இதழையும் நடத்தி வந்தார். வட்டித் தொழில் நடத்திக்காசு சம்பாதிக்க இங்கே இருந்த செட்டிமார் எல்லாம் பர்மா மலேயா என்று போய்க் கொண்டிருந்த நேரத்தில் செய்து கொண்டிருந்த தொழிலை விட்டு விட்டு,புத்தகங்களைப் பதிப்பிக்க வேண்டும்  என்ற ஆசையில் சொந்த ஊர் திரும்பியவர், தமிழ் அச்சு, பதிப்பகத்துறையில் முன்னோடி என்று கொண்டாடப்படும் திரு வை. கோவிந்தன். இந்த இருவருடைய பதிப்புக்களைத் தன்னுடைய சேகரத்தில் வைத்திருப்பதோடு, இருவருடனும் நேரில் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர் ஞானாலயா திரு பா.கிருஷ்ணமூர்த்தி

ஏ.கே செட்டியாரைப் பற்றி சென்னையில் அவர் நிகழ்த்திய உரை ஒன்றின் காணொளி இங்கே. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததுடன், அதை காணொளியாக வலையேற்றமும் செய்து வைத்திருக்கும் திரு பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்)அவர்களுக்கு நன்றியுடன்! போதுமான வெளிச்சம் இல்லை, முகம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் உரையாடல் மிகத் தெளிவாக இருக்கிறது. சுமார் ஒன்றரை மணிநேரப் பதிவு இது. கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது பொறுமையாகப் பார்க்கவும்.



இன்றைய தலைமுறைக்கு, உலகம் சுற்றிய தமிழரை, இவரை  விட வேறு யார் தான் இத்தனை சிறப்பாக அறிமுகம் செய்து வைத்து விட முடியும் என்று ஆச்சரியப்பட வைக்கிற வைக்கிற அளவுக்கு, அரிய தகவல்களோடு இந்த உரை இருக்கிறது.இந்த வலைப்பக்கங்களிலேயே, கூடிய விரைவில், புதிய ஆடியோ, வீடியோ பாட்காஸ்ட் வழியாக ஞானாலயா திரு பா.கிருஷ்ணா மூர்த்தி ஐயா உங்களோடு உரையாட வருவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த உரையாடலைக் கேட்டு விட்டு, உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், செய்வீர்கள்தானே?





Sunday, 1 July 2012

புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!




புதுக்கோட்டைப் பகுதியில் உங்களுடைய நண்பர்கள் இருக்கிறார்களா? அவர்களிடமும் இந்த வேண்டுகோளை, மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்களேன்!அப்படியே அதன் நகலை, gnanalayapdk@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்ப முடியுமானால் மிகவும் உதவியாக இருக்கும்!




புதுக்கோட்டை ஞானலயாவுக்கு சில உதவிகள் வேண்டும். ஏற்கெனெவே ஞானாலயா குறித்த விவரங்கள், அதற்கு தற்சமயம் தேவைப் படுகிற உதவிகள் குறித்து கூகிள் ப்ளஸ்சில் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிற வேலை ஆரம்பமாகி இருக்கிறது. கழுகு குழுமத்தில் இந்த செய்தி பகிரப் பட்ட பிறகு, எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் ஞானாலயா பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருப்பதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் உதவிக் கரங்களாக மாறுவதில் நாம் அடுத்து செய்ய வேண்டியது என்ன?

இந்த சுட்டியில் கொஞ்சம் விவரங்கள், அதன் ஏப்ரல், மே மாத நிலவரங்களை அறிந்து கொள்கிற விதத்தில்  பின்னூட்டங்களில் காணக் கிடைக்கும்.


இந்த கூகிள் ப்ளஸ்சில் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக.தற்போதைய நிலவரம் வரை காணக் கிடைக்கும். ஞானாலயா என்று கூகிளிட்டுத் தேடினால்,எத்தனை பேர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம் கிடைக்கும்.

அடுத்து செய்ய வேண்டிய பணிகளாக .....

முதலாவதாக, அங்கே இருக்கும் அரிய சேகரத்தை மின்னாக்கம் செய்கிற பணி அதற்குத்தேவையான தன்னார்வலர்களைப் புதுக்கோட்டையில் கண்டறிவது, அவர்களை ஒருங்கிணைப்பது. அவர்களுக்கு மின்னாக்கம் செய்வதில் பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதற்கும், சில தொழில்நுட்ப உதவிகளுக்கும் உள்ளூரிலேயே தகுந்த நபர்களை அடையாளம் காணும் முயற்சி தொடங்கி இருக்கிறது. ஏற்கெனெவே உதவுவதாக வாக்களித்த சில அமைப்புக்கள், தனிநபர்களிடமிருந்து வேறு தகவல்கள் எதுவும் இல்லை.ஆக, அவைகளை வெறும் பேச்சு என்று ஒதுக்கித்தள்ளி விட்டு, அடுத்து ஆகவேண்டிய காரியங்களைக் கவனிக்கத் தொடங்கியாக வேண்டி இருக்கிறது.

இரண்டாவதாக சில ஸ்கேனர்கள், கணினிகள்  இவைகள் இப்போது வேலையை செய்வதற்கு என்று ஆரம்பித்தாலும், பின்னால் ஒரு செர்வர் ப்ளஸ் நோடுகளாக மாற்றி, படிப்பதற்கு, ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எடுத்துக் கொள்வதற்குமான சாதனங்களாகவும் வைத்துக் கொள்வதற்கான அடிப்படைக் கட்டமைப்பு அதற்கான  நிதி ஆதாரங்களைத் திரட்டுவது.

ரெடிமேடாகக் கிடைக்கும் ஸ்கேனர்களை விட, தேவைக்குத் தகுந்த ஸ்கேனர்களை உள்ளூரிலேயே வடிவமைத்துக் கொள்வது, செலவு சிக்கனப் படுத்துவதாக மட்டுமல்ல, செயல் வேகத்தை அதிகரிக்கக் கூடிய விதத்திலும் இருக்கும்.இதை வடிவமைத்துத் தருவதற்குண்டான தொழில்நுட்பம் இங்கேயே இருக்கும்போது, அதைப்பயன் படுத்திக் கொள்வது பொருத்தமாக இருக்கும் இல்லையா!இந்த சுட்டியை பாருங்கள்!

CES 2011 - Make your own ebooks with Book Saver   இதே போல இங்கேயே வடிவமைத்துக் கொள்ளலாம்!

மூன்றாவதாக, பெருகி வரும் சேகரங்களைப் பாதுகாப்பதற்காக, மாடியில் தொள்ளாயிரம் சதுர அடியில் உத்தேசித்திருக்கும் கட்டிட விரிவாக்கத்துக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது. நல்லெண்ணம் கொண்ட ஒரு நண்பர் அச்சாரமாகக் கொடுத்திருக்கும் ஒருலட்சரூபாயுடன், இந்த வேலை ஆரம்பமாகி விட்டது.சுமார் எட்டரை-ஒன்பது லட்சம் மதிப்பீட்டிலான இந்த வேலை தொய்வில்லாமல் நடப்பதற்கு, உதவிக்கரங்கள், நேரத்துடன் நீண்டாக வேண்டும்.

நான்காவதாக, திரு பா.கிருஷ்ணமூர்த்தியிடம் இருக்கும் புத்தகங்கள், புத்தக ஆசிரியர்கள், பதிப்பகங்கள் குறித்த தகவல்களை ஆவணப் படுத்துவது

இதுவரை ஞானாலயாவைக் குறித்து வெளியாகியிருக்கும் தகவல்களை ஒரே இடத்தில் பார்க்கும் விதத்தில் ஒரு வலைப்பூ தொடங்கப் பட்டிருக்கிறது.

http://gnanalaya-tamil.blogspot.in/   இந்த வலைப்பக்கங்களை புக்மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள். ஒரு நல்லபணிக்கு உங்களாலானவரை உதவுங்கள்!
விரைவில் வீடியோ பாட்காஸ்ட், ஆடியோ பாட்காஸ்டுடன், இந்த வலைத் தளத்தை விரிவு படுத்துவதற்காண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. திரு கிருஷ்ண மூர்த்தி ஐயா தன்னிடமிருக்கும் அபூர்வமான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான, ஆவணப் படுத்துவதற்கான முன்னோட்டமிது.

வயதான காலத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்களைத் தொந்தரவு செய்யாமல், ஒன்று அல்லது இரண்டு முழுநேர ஊழியர்கள், நூலகப்பராமரிப்பு செலவுகளை ஈடு செய்கிற விதத்தில் ஒரு கார்பஸ் உருவாக்குவது என்று ஒவ்வொரு படியாக வேலைகளைத் தொடங்கினால் அதுகடந்த ஐம்பத்து மூன்றாண்டுகளாக அவர்கள் செய்து வருகிற பணிக்கு உறுதுணையாக, அடுத்து வரும் தலைமுறைக்கும் பயன்படுவதாக இருக்கும்.

புதுக்கோட்டையை சேர்ந்த பதிவர்களிடம்  அவர்கள் முன்கைஎடுத்து செய்யக் கூடிய நல்ல ஒரு ஆரம்பமாகவும் இது இருக்கும் என்று விடுக்கப்பட்ட வேண்டுகோளின் மீது இதுவரை எந்த முன்னேற்றமுமில்லை. ஞானாலயாவுக்காக 2007 இல் உருவாக்கப்பட்ட வலைத்தளம் வேலை செய்யவுமில்லை.

இப்போது புதுகைப்பதிவர்களை நம்பிக் காத்திருப்பதை விட  ஞானாலயா தம்பதியினரின் மாணாக்கர்கள், நலம் விரும்புகிறவர்களைக்  கொண்டே சில ஆக்க பூர்வமான வேலைகளை செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன

ஆரம்பத்திலேயே சொன்னதைப் போல, நிதியுதவி முக்கியம் தான்! ஆனால் வெறும் பணத்தினால் மட்டுமே சாதிக்கக் கூடிய பணி இல்லை இது! மனித உழைப்பும் அதிகமாகத் தேவைப்படுகிற பணி இது! புத்தகத்தை நேசிக்கிறவர்கள்,  மரபுகள், பண்பாடு, வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருப்பவர்கள், கருத்துத் திருடர்களிடமிருந்து, உண்மையைப்பாதுகாக்கும் ஆர்வமுடையவர்கள் என்று பலவிதமான ஆர்வலர்களும் ஒன்று கூடித் தேரிழுக்கும் உன்னதமான பணி இது.

தொடர்புக்கான முகவரி, மற்றும் நிதி அனுப்புவதற்குத் தேவையான விவரங்கள்:

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா,
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

e-mail: gnanalayapdk@gmail.com

வங்கி விவரம்:

Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
IFS CODE: UCBA0000112

நூல்கள், நூல்சேகரம்,நூல்களைப் பாதுகாப்பது, தமிழ்நாட்டில் உள்ள சில நூலகங்களைப் பற்றி எழுத்தாளர் எஸ் ராம கிருஷ்ணனின் வலைப் பக்கங்களில் ஞானாலயாவைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு இங்கே இருக்கிறது.

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...