புதுக்கோட்டை ஞானாலயா நூலக நிறுவனர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காலச்சுவடு இதழுக்கு கொடுத்த நேர்காணலின் மூன்றாவது பகுதி.
Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts
Wednesday, 12 June 2013
Thursday, 23 May 2013
காலச்சுவடு - ஞானாலயா பேட்டி 2
புதுக்கோட்டையில் திருக்கோர்ணம் பகுதியில் உள்ள பழநியப்பா நகரில் ஞானாலயா என்ற நூலகம் மக்களின் பயன்பாட்டுக்காக கட்டணம் ஏதுமின்றி மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்றது.
அதன் நிறுவனர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காலச்சுவடு இதழில் கொடுத்த நீண்ட பகுதியின் இரண்டாவது பகுதி.
படிக்க வேண்டிய தளங்கள்
Thursday, 9 May 2013
காலச்சுவடு - ஞானாலயா பேட்டி
ஞானாலயா திரு.கிருண்ஷ்மூர்த்தி அவர்கள் காலச்சுவடு இதழில் கொடுத்த நீண்ட பேட்டியை பகுதிகளாக பிரித்து இங்கே தருகின்றோம்.
இதுவொரு நூலகம் வளர்ந்த கதை என்பதை விட நூல்களின் மேல் கொண்ட அக்கறையின்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷ புதையலைப் பற்றிய ஆவணம்.
படிக்க வேண்டிய சில தலைப்புகள்.
காலச்சுவடு தளத்தில் உள்ள
Sunday, 17 February 2013
திருப்பூரில் ஞானாலயா மழை - Dollar Nagaram - Gnanalaya B. Krishnamiirthy Part 1
திருப்பூரில் கடந்த 27.1.2013 அன்று நடந்த டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில், புதுக்கோட்டையில் இருந்து செயல்படும் ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ஏறக்குறைய 50 நிமிடங்கள் புத்தகங்கள்,உலகளாவிய நூலகங்கள் குறித்து உரையாற்றிய காணொளியின் முதல் பகுதி இது.
பொதுவாக மேடைப் பேச்சு என்பது தற்காலத்தில் அலங்கார வார்த்தைகளால் கோர்த்து அது கேட்பவருக்கு பொழுது போக்க உதவும் கலையாக உள்ளது. ஆனால் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் காணொளி காட்சிகளை கேட்டுப் பாருங்கள்.
நீங்கள் இது வரையிலும் அறியாத தகவல்களாக , இன்று வரையிலும் புத்தகங்களில் வெளிவராத தகவல்களின் தொகுப்பாக, அறிவுக்களஞ்சியமாக ஒவ்வொரு தலைவர்களைப் பற்றியும், விசயங்களைப் பற்றியும் தனது கம்பீரமான குரலால் எடுத்து வைக்கின்றார்.
இதுவரையிலும் ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உலகம் முழுக்க பல்வேறு அமைப்புகளில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், பல்வேறு இலக்கிய அமைப்ப்புகளின் மூலம் 2000 கூட்டங்களுக்கும் மேல் பங்கெடுத்து தான் கற்ற புத்தக அறிவை மற்றவர்களுக்கு பரப்புவதை ஒரு கடமையாக வைத்துள்ளார்.
தற்போது தான் அதன் காணொளி காட்சிகளை ஆவணப்படுத்துவதில் இந்த வலை தளம் சிறப்பாக செயலில் காட்டிக் கொண்டிருக்கின்றது.
உங்கள் நண்பர்களுக்கும் ஞானாலயா குறித்து தெரிவிக்க இந்த வலைதளத்தை முழுமையாக படித்துப் பாருங்கள். நாம் சமூகத்திற்காக தனியாக சிறப்பாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இது போன்ற விசயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினாலே இதுவும் ஒருவிதமான சமூக அக்கறை தான்.
பகிர்ந்து கொள்வதில் அறிவு பகிர்தல் தான் தலைமுறைகள் தாண்டியும் நிற்கக்கூடியது.
வருகை புரிந்த உங்களுக்கு ஞானாலயா ஆய்வு நூலகம் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றி. இரண்டாவது தொகுப்பு அடுத்த பதிவில் வெளியிடப்படும்.
Tuesday, 8 January 2013
திட்டமிடுதலை புரிந்து கொள்ளுங்க
திட்டமிடுதல் என்பது தான் இங்கே முக்கியமாக கருதப்படுகின்றது. நாட்டில் நடந்த ஒவ்வொரு செயல்பாடுகளுக்குப் பின்னாலும் ஓராயிரம் பேர்களின் திட்டமிடுதலுடன் கூடிய உழைப்பு மூலமே சாத்தியமாகி நமக்கு கிடைத்துள்ளது. ஆனால் புதுக்கோட்டையிலிருந்து செயல்படும் ஞானாலயா என்ற நூலகம் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர் மனைவி டோரதி கிருஷ்ணமூர்த்தி என்ற இருவரின் உள் மன ஆசைகளை, நோக்கங்களை மட்டும் கொண்டே இன்று சாத்தியமாகி பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயன் தந்து கொண்டிருக்கின்றது.
தினந்தோறும் ஏராளமான உள்நாடு, வெளிநாடு, வெளிமாநில மக்கள் தாங்கள் தேடிக் கொண்டிருந்த தமிழ் ஆங்கில புத்தகங்களை ஞானாலயாவில் கண்ட போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை அங்கேயிருக்கும் வருகை பதிவேட்டில் தங்கள் கையெழுத்து மூலம் எழுதி வைத்துள்ளனர். நீங்களும், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இந்த நூலகத்தை அறிமுகம் செய்து வைக்கலாமே.
திரு கிருஷ்ணமூர்த்தியின் ஞானாலயா நூலகத்தைப் பற்றி தமிழ் ஆங்கில பத்திரிக்கையில் பல பேட்டிகள் வந்துள்ளன. அவை ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த பதிவுகள் மூலம் இணைய உலகத்திற்கு அறிமுகப் படுத்துவதில் பெருமையடைகின்றோம்.
இந்த நூலகத்தின் திட்ட வரைவு, செலவீனங்கள் குறித்த விபரங்கள் உங்கள் பார்வைக்கு.
ஜனவரி 2013 27 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் ஞானாலயா திரு. பா கிருஷ்ணமூரத்தி உரையாற்றுகின்றார். முழுமையான விபரங்கள் படிக்க சொடுக்க இங்கே
ஜனவரி 2013 27 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் ஞானாலயா திரு. பா கிருஷ்ணமூரத்தி உரையாற்றுகின்றார். முழுமையான விபரங்கள் படிக்க சொடுக்க இங்கே
Monday, 17 December 2012
நூலகம் என்பது பல்கலைக்கழகமே
உங்களுக்காக தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சி-யாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் நேரு.
‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல்.
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார்.
‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.
குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.
‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தாராம் மகாத்மா.
விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர் கிங்.
எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது... எது நூலகத்திற்கு அருகில் உள்ளது என கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்.
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்.
ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்காணல்.
Monday, 10 December 2012
அக்கறையோடு சேகரித்தார். இன்று உதவுகின்றது
Thursday, 6 December 2012
புத்தகங்களைத் தேடி ஒரு பயணம்
தமிழ் அச்சிடல் வரலாறு::
தமிழ் அச்சிடல் அறிமுகமும் வளர்ச்சியும் திருத்தூதுப் பணிக்காக இந்தியா வந்திருந்த சமயப் பரப்புரையாளர்களாலும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முயற்சிகளாலும் நிகழ்ந்தது.[1]
இந்த தொடக்க கட்ட வளர்ச்சிக்கு முதன்மையாளர்களாக இயேசு சபை இறைப்பணியாளர்களும் பின்னர் சீர்திருத்தத் திருச்சபையின் போதகர்களும் இந்து அறிஞர்களும் குறிப்பிடப்படுகிறார்கள்.
இந்த தொடக்க கட்ட வளர்ச்சிக்கு முதன்மையாளர்களாக இயேசு சபை இறைப்பணியாளர்களும் பின்னர் சீர்திருத்தத் திருச்சபையின் போதகர்களும் இந்து அறிஞர்களும் குறிப்பிடப்படுகிறார்கள்.
புதிதாக குடிபுகுந்தவர்கள் உள்ளூர் மொழியின் முக்கியத்துவத்தினை உணர்ந்தவர்களாக தங்கள் சமய போதனைகளை உள்ளூர் மொழிகளில் பரப்ப எடுத்த முயற்சிகள் தென்னிந்தியாவில் நாட்டுமொழிகளில் அச்சிடும் பண்பாட்டை அறிமுகப்படுத்தியது. கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவ சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை என பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக்கலை மந்தமாகவே வளர்ச்சி பெற்றது.
இதனால் பெருந்தொகை இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயின. இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்ட ஆக்கங்கள் ஆகும்.
இதனால் பெருந்தொகை இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயின. இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்ட ஆக்கங்கள் ஆகும்.
1865 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலான ”தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை” (Classified catalogue of Tamil printed books) 1865 வரை 1755 நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டதாக கூறுகிறது முதல் தமிழ் புத்தகம் 1554ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள் லிசுபனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு ஆகியோர் ஆவர். இம்மூவரும் தமிழ் அறிந்த இந்தியர்களே என்றும் அவர்களுடைய கிறித்தவப் பெயர்களே நமக்குத் தெரிந்துள்ளன என்றும் அறிஞர் கருதுகின்றனர்.
கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha ē lingoa Tamul e Portugues) (தமிழில்: "தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு") என்னும் தலைப்பில் வெளியான அந்நூலில் தமிழ்ச் சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல்; ஐரோப்பிய மொழியிலிருந்து முதலில் மொழிபெயர்ப்பான தொடர் பாடம்;
இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று தமிழறிஞர் கமில் சுவலெபில் குறிப்பிடுகிறார். மதுரை போன்ற இடங்களில் செப்புப் பட்டயங்களிலும் கற்களிகளிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்திலேயே இந்தத் தமிழ் அச்சு வெளியீடு நிகழ்ந்தது.
தமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் உருசியா (1563), ஆபிரிக்கா (1624) மற்றும் கிரீஸ் (1821) நாட்டு முதல் அச்சிட்ட நூல்களைவிட முந்தையதாக விளங்குகிறது. சென்னையில் அச்சிடலுக்கு வித்திட்டவர் பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க் ஆவார்.
1578ஆம் ஆண்டிலேயே தென்னிந்தியாவில் அச்சு இயந்திரம் நிறுவப்பட்டபோதும் அடுத்து வந்த இறைப்பணியாளர்களின் அக்கறையின்மையாலும், குறிப்பாக ஆங்கில மற்றும் டச்சு ஆதிக்கம் மேலோங்கியதால் போர்த்துகீசியர் வலுவிழந்ததாலும் போர்த்துகீசியரின் அச்சுக் கூடங்களில் தமிழ் அச்சுப் பணி தொடரவில்லை.

1612ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏறக்குறைய 50-60 ஆண்டுகளாக எந்தத் தமிழ் நூலும் அச்சாகவில்லை என்று தெரிகிறது. போர்த்துகீசிய அரசு ஆணைப்படி இந்திய மொழிகளில் அச்சிடுவது 1640களில் நிறுத்தப்பட்டது. 1649 முதல் 1660 வரை நோபிலியும் மனுவேல் மார்ட்டினும் எழுதிய பல ஆக்கங்கள் அச்சடிக்கப்படாது இருந்தன.
அச்சிட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை தற்காலிகமாகவே இருந்தன. காட்டாக சீகன்பால்க் நிறுவிய தரங்கம்பாடி அச்சகத்தில் தமிழறிஞர் வீரமாமுனிவரின் இலத்தீன்-கொடுந்தமிழ் இலக்கண நூல் 1739இல் அச்சேறியது. கேரளத்தில் அமைந்த அம்பலக்காடு என்னும் இடத்தில் இயேசு சபையினருக்கு உரித்தான அச்சகத்தில் ஒருசில தமிழ் நூல்கள் 1677-1679 அளவில் அச்சாயின.
1835 இல் கிழக்கிந்தியக் கம்பனியின் பதிப்புச் சட்டம் விலக்கப்பட்ட பின் இசுலாமிய தமிழ் நூல்கள் பதிப்புப் பெறுவது முனைப்புப் பெற்றது. அச்சுத் தொழில்நுட்பத்தால் முன்னர் எப்பவும் காட்டிலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இசுலாமிய படைப்பாக்கமும், நூல் பதிப்பும் விரிவு பெற்றது.[24] தமிழ் இசுலாமிய எழுத்தாளர்கள் கணிசமான அரபி மற்றும் பாரசீக சொற்களைப் பயன்படுத்தினர். இதனால் முசுலிம் இல்லாத வாசர்களை எட்டுவது சற்றுக் கடினமாக இருந்தது. மேலும் சிலர் அரபி எழுத்துக்களை தமிழ் எழுதப் பயன்படுத்தினர்.
வேப்பேரி அச்சகம்:
குடியேற்றவாத பெருநகரங்களில் அச்சிடுவதைப் பொருத்தமட்டில் சென்னை முதன்மையாக விளங்கியது. கிறித்துவ அறிவு வளர்ச்சிச் சமூகம் (Society for Promoting Christian Knowledge - SPCK) சென்னையின் புறநகர் வேப்பேரியில் 1726ஆம் ஆண்டு பெஞ்சமின் சுல்ட்சால் நிறுவப்பட்டது. இது தரங்கம்பாடியில் இருந்த திருத்தூது மையத்தின் விரிவாக செயல்பட்டது.
முன்னதாக 1712ஆம் ஆண்டு இவ்வமைப்பு தரங்கம்பாடியில் கொடையாக நல்கியிருந்த தமிழ், தெலுங்கு வரிவுருக்களை தாங்கிய அச்சுப்பொறி அங்கு சீகன்பால்கிற்கு பதிப்பிக்க உதவியாக இருந்தது. இங்கிருந்துதான் மலபாரில் வாழ்கின்ற புற சமயத்தார் குறித்த பொது விவரணம் (A General Description Of Malabar Heathendom), நான்கு நற்செய்திகளும் திருத்தூதர் பணிகள் நூலும் (Four Gospels And Acts), மற்றும் சபிக்கப்பட்ட புற சமயத்தார் (Accursed Heathendom) பதிப்பிக்கப்பட்டன. தவிர 1715ஆம் ஆண்டில் புதிய ஏற்பாட்டின் தமிழாக்கமும் வெளியிடப்பட்டது.
1761ஆம் ஆண்டில் பிரெஞ்சு காலனியாகிய புதுச்சேரியை ஆங்கிலப் படைகள் சேர் எய்ர் கூட் தலைமையில் தாக்கியபோது ஆளுனர் மாளிகையில் இருந்த அச்சுப்பொறியை கைப்பற்றினர்.[19] அப்பொறியின் இயக்குனர் டெலனுடன் அதனைச் சென்னைக்குக் கொண்டு வந்தனர். கிறித்தவ அறிவு வளர்ச்சிச் சமூகத்தின் யோகன் பிலிப் பாப்ரிசியசு செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூட்டிற்கு வாக்குறுதி தந்து அச்சுப்பொறியை வேப்பேரிக்கு கொணர்ந்தார்.

1762ஆம் ஆண்டிலேயே சமூகம் நாட்காட்டி யொன்றையும் தமிழ் நூல்களையும் அச்சடிக்கத் தொடங்கியது. இது கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் வெளியான நூல்களை விட பத்தாண்டுகள் முன்பாகவே வெளியானவையாகும்.
* Thanks to WIKIPEDIA*
படங்கள் உதவி - 4 Tamil Media.com
Subscribe to:
Posts (Atom)
ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...
-
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...
-
காக்கை சிறகினிலே இந்த மாத இதழில் ( December,2011) ஜென்னைப் பற்றி நீண்ட, சுவையான கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார் அய்யா ஞானாலயா கிருஷ்ணமூர்...
-
இ ந்த வலைப்பக்கங்களை நண்பர் நிகழ்காலத்தில் சிவா துவங்கி வைத்த நேரம் , மிக மிக நல்ல நேரம் என்றே சொல்ல வேண்டும்! புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு...