Tuesday 17 July 2012

சிரிக்கும் துறவிகள் - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி


காக்கை சிறகினிலே இந்த மாத இதழில் (December,2011) ஜென்னைப் பற்றி நீண்ட, சுவையான கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார் அய்யா ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி.


காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்த கட்டுரையின் முதல் பக்கம்! வார்த்தைகளை வீணடிக்காத உழைப்பே தியானம் என்று நச்சென்று ஜென் பவுத்தத்தை விளக்க ஆரம்பிக்கிறது!
இதை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். அதனூடே சிரிக்கும் துறவிகள் என்ற கதை ஒன்றினை சொல்கிறார். அதை எனது மொழியில் இங்கே தருவதை எனது இன்றைய கடமையாகவே கருதுகிறேன்.

மூன்று துறவிகள் சீனாவில் இருந்தார்கள். மூவரும் சதா சர்வ காலமும் சிரித்துக் கொண்டே இருந்ததால் அவர்களை மக்கள் சிரிக்கும் துறவிகள்” என்றே அழைத்தார்கள். எதற்காக சிரிக்கிறோம் என்பது அவர்களுக்கே விளங்காத நிலையில் பையப் பைய மக்களும் அவர்களோடு சேர்ந்து சிரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

ஒரு நாள் அந்த மூவரில் ஒரு துறவி இறந்து போனார். ஊரே திரண்டு நின்று அழுது தீர்த்தது. ஆனால் மற்ற இரண்டு துறவிகளும் நண்பனின் பிணத்தருகே நின்று சிரித்துக் கொண்டே இருந்தனர். எரிச்சலடைந்த மக்கள் அவர்களிடம் சென்றனர்.

“ நண்பனின் பிணமருகே நின்று சிரிக்கிறீர்களே. இது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா?”

“இல்லை”

“பாவிகளா. உருப்படுவீங்களா”

“ பந்தயத்தில் எங்களை அவன் ஜெயித்து விட்டான். அதுதான் சிரிக்கிறோம்”

“பந்தயமா?”

“ஆமாம், எங்களில் யார் முதலில் சாவது என்பது பந்தயம். அவன் ஜெயித்து விட்டான். அதை நினைத்துதான் சிரிக்கிறோம்”

வாயடைத்துப் போனார்கள்.

செத்த துறவி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

“ நான் சதா சிரித்துக் கொண்டே இருந்ததால் அழுக்கென்னை அண்டவே இல்லை. எனவே நான் செத்துப் போனதும் என்னைக் குளிப்பாட்டாமல் அப்படியே எரித்து விடுங்கள்.”

அப்படியே செய்தார்கள்.

அப்போது அவர் தனது உடைகளுக்குள் ஒளித்து வைத்திருந்த வெடிகள் வெடித்தன. வானத்தில் சில ஜொளித்து வேடிக்கை காட்டின. எரியூட்ட வந்திருந்த எல்லோரும் சிரித்தார்கள்.

என்ன ஒரு பந்தயம்? வென்றவன் தனது வெற்றியைக் கொண்டாடவே இயலாது என்று தெரிந்திருந்தும் தோற்றவர்கள் தங்களது தோல்விக்காக துவளாமல் வென்று இல்லாமல் போனவனது, அல்லது இல்லாமல் போய் வென்றவனது வெற்ரியை கொண்டாடுவது என்பது இருக்கிறதே... அப்பப்பா... ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னமே கதை சொல்லி இருக்கிறார்கள். 

அநேகமாக தனது மரணத்திலும் மக்கள் சிரித்து மகிழ எதையோ வைத்து விட்டுப் போன மகத்தான மனிதன் இவனாகத்தானிருக்கும்!

Tuesday, December 13, 2011 

Thanks and courtesy:    http://www.eraaedwin.com/2011/12/blog-post_13.html

இந்தப் பதிவெழுதிய திரு இரா. எட்வின் காக்கைச் சிறகினிலே மாதஇதழின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார். 

"விழிப்புணர்வில் சற்று சுணக்கம் ஏற்படும் போது சீடனை அடிக்க குருவுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே உரிமை சீடனுக்கும் உண்டு என்பது ஜென்னின் சிறப்புகளில் ஒன்று. எதையும் கற்றுத்தராத குருவுக்கு ஒரு ஜென் மாணவனால் தான் நன்றி கூறமுடியும் ஏனென்றால் சுயமான வளர்ச்சிக்கு அவர் வழிகாட்டினார்" என ஜென் பௌத்தத்தை விளக்கும் ஜென் பௌத்தம் ஓர் அறிமுகம் என்ற தொடரை ஞானாலயா கிருஷ்ண மூர்த்தி எழுதி வருகிறார்.

காக்கைச் சிறகினிலே திரு வி முத்தையா அவர்களை வெளியிடுபவர், ஆசிரியராகவும், இதழாசிரியராக வைகறையையும் கொண்டு சென்னையில் இருந்து வெளிவருகிறது.

தனி இதழ்  ரூ.20  ஆண்டு சந்தா ரூ.225

தொடர்பு முகவரி:

காக்கை,
அறை எண் : 7, முதல் தளம், நோபிள் மேன்ஷன்,
288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி
சென்னை 600 005


மின்னஞ்சல் : saalaramvaigarai@gmail.com

..


5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இதுவரை அறியாத கதை
    அவசியம் அறிந்திருக்க வேண்டிய கதை
    பதிவாக்கித்தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சிறப்பான கதை...
    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...
    வாழ்த்துக்கள்...(த.ம. 2)

    ReplyDelete
  4. திரு எஸ் வி ரமணி!

    கதை நன்றாகத்தான் இருக்கிறது!ஆனால், நிஜமும் நன்றாக இருக்கவேண்டுமே!

    இந்த வலைப்பக்கங்கள், புதுக்கோட்டையில் ஞானாலயா ஆய்வு நூலகம் என்ற பெயரில், இன்றைக்குத் தமிழில் மட்டும் எழுபதாயிரம் புத்தகங்கள், அதில் பாதி அளவுக்கு ஆங்கில நூல்கள் என்று ஒரு தனிமனிதராக, அவரைப் போலவே புத்தகங்களை நேசிக்கிற ஒரு பெண்மணியை காதல் திருமணம் செய்துகொண்டபிறகு லட்சிய தம்பதியராக இருவருமே சேர்ந்து ஒரு மிகப்பெரிய நூலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வேறெங்குமே கிடைக்காத அரிய நூல்கள், அத்தனையும் முதற்பதிப்புக்கள்தான் என்பது கூடுதல் சிறப்பு, அந்த சேகரம் இன்றைக்கு அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பதிப்பகங்கள் என்று எல்லோருக்கும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

    எழுபது வயதிலும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா தேனீ போல சுறுசுறுப்பாகப் புத்தகங்களை இன்னமும் சேகரித்துக்கொண்டிருக்கிறார்.இந்த சேகரத்தை,டிஜிடைஸ் செய்வதில்,பாதுகாப்பதில் நம்முடைய பங்கும் இருக்கவேண்டும்இல்லையா! ஞானாலயா குறித்த செய்திகள் ஒரே இடத்தில் கிடைக்கிற மாதிரி அதே நேரம், ஞானாலயாவுக்கு உதவிக் கரங்கள் வேண்டும் என்ற செய்தியையும் பரவலாகக் கொண்டுசெல்வதற்காகவே இந்த வலைப்பக்கங்களை உருவாக்கி வருகிறோம்.

    ஞானாலயா குறித்த செய்தியை உங்கள் நண்பர்களிடம் தனிப்பட்ட மின்னஞ்சல், வலைப்பதிவு மற்றும் கூகிள் ப்ளஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொண்டு ஒரு நல்ல விஷயத்தில் நீங்களும் பங்கு கொள்ளுங்களேன்!உங்கள் வார்த்தையை ஏற்றுக் கொண்டு உங்களோடு தோள் கொடுக்கிற நண்பர்களையுமே சேர்த்து ஈடுபடுத்த முடியுமானால் மிகவும் நல்லது!

    திரு தனபாலன்! உங்களுக்குமே சேர்த்துத்தான் இந்த வேண்டுகோள்! கொஞ்சம் தோள் கொடுங்கள்!

    ReplyDelete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...