Tuesday 1 July 2014

ஆகஸ்டு 3 ல் சிற்பி இலக்கியவிருது - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

கவிஞர் மு.மேத்தாவுக்கு சிற்பி இலக்கிய விருது

கவிஞர் மு.மேத்தாவுக்கு 2014-ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது வழங்கபடவுள்ளது.இது குறித்து சிற்பி அறக்கட்டளையின் தலைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் சிற்பி அறக்கட்டளை கடந்த 18 ஆண்டுகளாக தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெüரவித்து வருகிறது. அப்துல் ரகுமான், பழமலய் சி.மணி, தேவதேவன், புவியரசு, கல்யாண்ஜி, வ.ஐ.ச.ஜெயபாலன், லெனின்தங்கப்பா, நா.முத்துக்குமார் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கவிஞர்கள் இவ்விருதுகளைப் பெற்றுள்ளனர்.
2014-ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருது ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பரிசும், இலச்சினையும் கொண்டது. சிற்பி இலக்கியப் பரிசு கவிஞர் சொ.சேதுபதிக்கு அளிக்கப்படவுள்ளது. இப்பரிசு ரூ. 15 ஆயிரம் மதிப்புடையது. சமூக நற்பணிக்கான பி.எம்.சுப்பிரமணியம் விருது, ஞானாலயா கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்படவுள்ளது. இவ்விருது ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசும், இலச்சினையும் கொண்டது.
பொள்ளாச்சியில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், சிலம்பொலி செல்லப்பனார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நன்றி தினமணி

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...