புதுக்கோட்டை நகரில் உலகத் திருக்குறள் பேரவை சார்பாக 21.09.2013 அன்று புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிகழ்த்திய உரை....உங்களுக்காக
நிகழ்காலத்தில் சிவா
Showing posts with label காணொளி. Show all posts
Showing posts with label காணொளி. Show all posts
Thursday, 3 October 2013
Saturday, 28 July 2012
தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடிக்கு நூற்றாண்டு விழா!
சென்ற மாதம் பதினேழாம் தேதி (17-06-2012) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்ப் பதிப்புத் துறையின் முன்னோடியான சக்தி திரு வை.கோவிந்தன் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. ,திரு வை.கோவிந்தன் எழுதிய நூல்கள், பதிப்பித்த புத்தகண்கள், நடத்திய சக்தி மாத இதழ், எழுதிய கடிதங்கள் என்று ஒரு கண்காட்சியையே சேர்த்து நடத்தியது இந்த நூற்றாண்டு விழாவின் முக்கியமான அம்சம்.
சக்தி திரு வை கோவிந்தனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தவிர வேறு யார், அவரைப்[ பற்றி இவ்வளவு விரிவான தகவல்களைத் தர முடியும்? வேறு யார் இத்தனை வெளியீடுகளையும் ஒன்று விடாமல் சேகரித்துப் பராமரித்து ஒரு கண்காட்சியாகவும் நடத்தி, சக்தி வை.கோவிந்தனுடன் பதிப்புத்துறையில் கூடச் சேர்ந்து பயணிக்கிற உணர்வை ஏற்படுத்தி தந்து விட முடியும்?

..
....
இசைக்கவி திரு ரமணன் பேசிக் கொண்டிருக்கிறார். அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், கல்கண்டு ஆசிரியர் திரு லேனா தமிழ்வாணன், திரு.வெ.. இறையன்பு இ ஆ ப, வலக்கோடியில் ஞானாலயா திரு பா.கிருஷ்ணமூர்த்தி
..
நூற்றாண்டு விழாவில் எடுத்த வீடியோவில் ஒலியின் தரம் சரியாக இல்லாததால், புதுக்கோட்டையில் ஞானாலயா திரு.பா கிருஷ்ணமூர்த்தியின் உரையை மறுபடியும் ஒளிப்பதிவு செய்து அனுப்பிய நண்பர் சென்னை க்ரியேடிவ் ஸ்டூடியோ திரு. எம்.விஜயனுக்கு நன்றியுடன்!
ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் வேண்டும் என்று ஒரு குழு இப்போதுதான் உருவாகி வளர்ந்து வருகிறது.இந்த அறிவுத் திருக்கோவிலைப் பாதுகாப்பதில் உங்கள்ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்கவேண்டும், நீங்களும் இந்தக் குழுவுடன் இணைந்து--அது எவளவு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்! ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்பது தான் முக்கியம்!
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் ஒவ்வொருவருடைய உதவிக்கரங்களையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது!

வாருங்கள்!சேர்ந்து செயல்படலாம்!
....
Wednesday, 4 July 2012
ஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி
ஏ.கே செட்டியாரைப் பற்றி சென்னையில் அவர் நிகழ்த்திய உரை ஒன்றின் காணொளி இங்கே. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததுடன், அதை காணொளியாக வலையேற்றமும் செய்து வைத்திருக்கும் திரு பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்)அவர்களுக்கு நன்றியுடன்! போதுமான வெளிச்சம் இல்லை, முகம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் உரையாடல் மிகத் தெளிவாக இருக்கிறது. சுமார் ஒன்றரை மணிநேரப் பதிவு இது. கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது பொறுமையாகப் பார்க்கவும்.
இன்றைய தலைமுறைக்கு, உலகம் சுற்றிய தமிழரை, இவரை விட வேறு யார் தான் இத்தனை சிறப்பாக அறிமுகம் செய்து வைத்து விட முடியும் என்று ஆச்சரியப்பட வைக்கிற வைக்கிற அளவுக்கு, அரிய தகவல்களோடு இந்த உரை இருக்கிறது.இந்த வலைப்பக்கங்களிலேயே, கூடிய விரைவில், புதிய ஆடியோ, வீடியோ பாட்காஸ்ட் வழியாக ஞானாலயா திரு பா.கிருஷ்ணா மூர்த்தி ஐயா உங்களோடு உரையாட வருவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த உரையாடலைக் கேட்டு விட்டு, உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், செய்வீர்கள்தானே?
Subscribe to:
Posts (Atom)
ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...
-
காக்கை சிறகினிலே இந்த மாத இதழில் ( December,2011) ஜென்னைப் பற்றி நீண்ட, சுவையான கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார் அய்யா ஞானாலயா கிருஷ்ணமூர்...
-
இ ந்த வலைப்பக்கங்களை நண்பர் நிகழ்காலத்தில் சிவா துவங்கி வைத்த நேரம் , மிக மிக நல்ல நேரம் என்றே சொல்ல வேண்டும்! புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு...
-
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...