Saturday 28 July 2012

தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடிக்கு நூற்றாண்டு விழா!



சென்ற மாதம் பதினேழாம் தேதி  (17-06-2012) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்ப் பதிப்புத் துறையின் முன்னோடியான சக்தி திரு வை.கோவிந்தன் அவர்களின் நூற்றாண்டு விழா  கொண்டாடப்பட்டது. ,திரு வை.கோவிந்தன் எழுதிய நூல்கள், பதிப்பித்த புத்தகண்கள், நடத்திய சக்தி மாத இதழ், எழுதிய கடிதங்கள் என்று ஒரு கண்காட்சியையே சேர்த்து நடத்தியது இந்த நூற்றாண்டு விழாவின் முக்கியமான அம்சம்.

க்தி திரு வை கோவிந்தனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தவிர வேறு யார், அவரைப்[ பற்றி இவ்வளவு விரிவான தகவல்களைத் தர முடியும்? வேறு யார் இத்தனை வெளியீடுகளையும் ஒன்று விடாமல் சேகரித்துப் பராமரித்து ஒரு கண்காட்சியாகவும் நடத்தி, சக்தி வை.கோவிந்தனுடன் பதிப்புத்துறையில் கூடச் சேர்ந்து பயணிக்கிற உணர்வை ஏற்படுத்தி தந்து விட முடியும்?
..
..
..
சைக்கவி திரு ரமணன் பேசிக் கொண்டிருக்கிறார். அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், கல்கண்டு ஆசிரியர் திரு லேனா தமிழ்வாணன், திரு.வெ.. இறையன்பு இ ஆ ப, வலக்கோடியில் ஞானாலயா திரு பா.கிருஷ்ணமூர்த்தி   


..

நூற்றாண்டு விழாவில் எடுத்த வீடியோவில் ஒலியின் தரம் சரியாக இல்லாததால், புதுக்கோட்டையில் ஞானாலயா திரு.பா கிருஷ்ணமூர்த்தியின் உரையை மறுபடியும் ஒளிப்பதிவு செய்து  அனுப்பிய நண்பர் சென்னை க்ரியேடிவ் ஸ்டூடியோ திரு. எம்.விஜயனுக்கு நன்றியுடன்!

ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் வேண்டும் என்று ஒரு குழு இப்போதுதான் உருவாகி வளர்ந்து வருகிறது.இந்த அறிவுத் திருக்கோவிலைப்  பாதுகாப்பதில் உங்கள்ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்கவேண்டும், நீங்களும் இந்தக் குழுவுடன் இணைந்து--அது எவளவு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்! ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்பது தான் முக்கியம்!

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் ஒவ்வொருவருடைய உதவிக்கரங்களையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது!



வாருங்கள்!சேர்ந்து செயல்படலாம்!
..
..
தொடர்புடைய பதிவு  -இதை வாசித்தீர்களா? 

..

2 comments:

  1. Dear Friends,

    Vanakkam.

    Kindly de-activate the BOXBE & provide 10 digit bank account number

    ReplyDelete
  2. திரு பத்மநாபன்! இந்த வலைத்தளத்தில் பின்னூட்டமிட, அல்லது மின்னஞ்சலில் தொடர்புகொள்ள பாக்ஸ்பீ வடிப்பான் எங்கேயும் இல்லை. புதிதாகத் தொடங்கியிருக்கிற முயற்சி என்பதால், பின்னூட்டங்கள் எதுவும் மட்டுறுத்தப்படுவதும் இல்லை. உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஞானலயாவுக்கு உதவும் கரங்கள் நீளுவதற்குத் தேவையான விவரங்கள் வலப்பக்கம் தனியாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...