..
..
கடந்த புதன்கிழமை, அதாவது மூன்றாம் தேதி திருப்பூர் பதிவர் ஜோதிஜி புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கு இரண்டாம் முறையாக வந்தபோது ஞானாலயா ஆய்வு நூலகத்தின் முகப்பில் கம்பீரமாக நிற்கும் ஒரு மண்குதிரையோடு எடுத்துக் கொண்ட படம்!இந்த மண்குதிரைக்கு ஒரு சுவாரசியமான பின்னணி, செய்தி இருக்கிறது.
புதுக்கோட்டை சுற்று வட்டாரத்தில், வரப்பூர், மழையூர் பகுதிகளில் (அய்யனார்) குதிரை சிலைகளை சுட்ட மண்ணில் செய்கிற கலைஞர்கள் இருப்பதையும், கால ஓட்டத்தில் அடுத்த தலை முறையினர் வேறு தொழில்களுக்குப் போய்விட, இந்த குதிரை செய்யும் கலை அருகி வருவதை ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மூன்று கலைஞர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
..
நான்கரை ஆண்டுகளுக்கு முன்னால்,புதுக்கோட்டைக்கு வந்து அருகி வரும் இந்தக் கலையைத் தெரிந்து கொள்வதற்காக கரின் டிபெர்க் என்ற பெண் அறுபத்தொன்பது வயதான கலைஞர், வெண்கலத்தில் குதிரைகளை வடிவமைப்பதில் தேர்ச்சியுள்ளவரும் கூட-அகே நோப்ளிங், அவர் மனைவி ஈவா நோப்ளிங் ஆகிய மூவரும் இங்கே வந்து, மண்குதிரை செய்யும் கலைஞர்களைத் தேடிப் பிடித்து அவர்களிடம் இருந்து மண் குதிரை செய்யும் விதத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
..
புதுக்கோட்டை, அதன் சுற்று வட்டாரங்களின் வரலாற்றுத் தகவல்களை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயாவுடைய உதவியும் இந்தக்கலைஞர்களுக்கு இருந்திருக்கிறது என்பதைத்தனியாக சொல்ல வேண்டுமோ? அதன் நினைவாக அந்தப் பெண்மணி வடிவமைத்த டெரகோட்டா (சுடுமண் சிற்பம்) குதிரை சிலை ஞானாலயாவில் கம்பீரமாக முகப்பில் இருக்கிறது!
முழுச் செய்தியையும் வாசிக்க இங்கே
முழுச் செய்தியையும் வாசிக்க இங்கே