Thursday 25 December 2014

ஞானாலயா நூலகத்திற்கான நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு - தகவல்

நூல் வாசிப்பில் ஆர்வம் கொண்ட நண்பர்கள் ஞானாலயாவைப்பற்றிய விபரங்களை ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள்.  ..தமிழில் கடந்த நூறாண்டுகளுக்குள் வெளியான நூல்களின் முதற்பதிப்பு நூல்கள் இங்கே பாதுகாக்கப்பட்டு உள்ளன.

பதிப்புகள் பல காணும் நூல்கள், பெரும்பாலும் மூலவடிவில் இருப்பதில்லை என்பதை ஞானாலாயா நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் சொல்லும்போது , இந்நூல்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் நமக்கு விளங்கும்..

இந்த நூலகத்திற்கென தனது சொந்த செலவில் கட்டிடம் கட்டியதோடு மட்டுமல்லாமல் அதை பாதுகாத்தும் அங்கே நேரில் வருபவர்கள் விரும்பும் புத்தகத்தில்  பகுதிகளை நகல் எடுத்தும் தந்தும் இன்றளவும் உற்சாகம் குறையாது இருக்கின்றனர் திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்.

இவர்களது முயற்சிக்கு உறுதுணையாய், நூலகத்தை பராமரிக்கவும், பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இந்நூலகத்தின் அரிய நூல்களை மின்நூல்கள் ஆக்கி பாதுகாக்கவும் நன்கொடைகளை அளிக்க உதவும் நல் உள்ளங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நன்கொடைகளுக்கான வரிவிலக்கு 80G அனுமதி பெறப்பட்டிருக்கிறது.








அதன் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன...ஐயா வேண்டுகோளும் இணைக்கப்பட்டுள்ளது....நண்பர்களிடம் கொண்டுசேர்ப்போம்...நூலகத்தில் வளர்ச்சியில், பாதுகாப்பதில் நமது பங்கினை உறுதி செய்வோம்..

அய்யாவுடன் தொடர்பு கொள்ள.. 

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்

6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 

புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140




நன்றியுடன்

நிகழ்காலத்தில் சிவா

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...