ஒரு நல்ல நூலகத்தின் அடையாளம் அது எத்தனை கோடியில் கட்டப்பட்டது, எத்தனை புத்தகங்கள், நூலகர்கள் இருக்கிறார்கள் என்பதில் மட்டுமே இல்லை!
அந்த நூலகம் வாசகர்களுக்கு எந்த அளவுக்குப் பயன்படுகிறது,வெறும் புத்தக அட்டவணையை மட்டுமே அறிந்த நூலகர்கள் என்று இல்லாமல், இருக்கும் நூல்களை முழுமையாக வாசித்து உள்வாங்கிக் கொண்டு, நூல்களைத் தேடுகிறவர்களுக்கு நூல்களையும் தாண்டி நூலாசிரியர், பதிப்பகம், வெளியான சூழ்நிலை, வாசகர்கள் மீது அந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கம், இப்படி மேலதிக விவரங்களைத் தரக் கூடிய நூலகம் தமிழ் நாட்டில் ஒன்று இருக்குமென்றால் அது புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் ஒன்று மட்டும்தான் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.
இப்படிச் சொல்பவர்கள் யாரோ ஒருவர் இருவர் மட்டுமே இல்லை! இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொண்ட எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், அரசியல்வாதிகள், விமரிசகர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் அத்தனை பேருடைய ஒருமித்த குரல்!
23-09-2010 தேதியிட்ட புதியதலைமுறை வார இதழில், ஜோ.டெய்சிராணி வெங்கடேசன் சர்வதேசத்தரத்தில் தமிழக அரசு சென்னையில் நிறுவியுள்ள 'அண்ணா நூற்றாண்டு நூலகம்; பற்றி சென்ற இதழில் எழுதியிருந்தோம். சில தனியார் நூலகங்களும் பொருளாதாரம் மற்றும் இடவசதி இல்லாத போதும், பிரமிக்க வைக்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றன. இந்தவாரம் : ஞானாலயா -பிரமிக்க வைக்கிறது ஒரு லட்சியத் தம்பதியினரின் 'ஞானாலயா' என்று எழுத ஆரம்பித்த முகவுரையோடு........இப்படிச் சொல்பவர்கள் யாரோ ஒருவர் இருவர் மட்டுமே இல்லை! இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொண்ட எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், அரசியல்வாதிகள், விமரிசகர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் அத்தனை பேருடைய ஒருமித்த குரல்!
படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கி, செய்திக் கட்டுரையை முழுவதுமாக வாசிக்கலாம்! வாசித்து விட்டு, ஞானலயாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்பதைக் கொஞ்சம் யோசியுங்களேன்!
No comments:
Post a Comment