Wednesday, 4 July 2012

ஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமுர்த்தி


பயண வசதிகள் மிகக் குறைவாக இருந்த அந்த நாட்களிலேயே, உலகம் சுற்றிய தமிழர் என்று வியந்தோதப்பட்டவர் கருப்பன் செட்டியார் என்கிற ஏ.கே செட்டியார்.உலகத்தின் பல நாடுகளுக்கும் பயணம்செய்து,தமிழில் பயணக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். குமரி மலர் என்ற இதழையும் நடத்தி வந்தார். வட்டித் தொழில் நடத்திக்காசு சம்பாதிக்க இங்கே இருந்த செட்டிமார் எல்லாம் பர்மா மலேயா என்று போய்க் கொண்டிருந்த நேரத்தில் செய்து கொண்டிருந்த தொழிலை விட்டு விட்டு,புத்தகங்களைப் பதிப்பிக்க வேண்டும்  என்ற ஆசையில் சொந்த ஊர் திரும்பியவர், தமிழ் அச்சு, பதிப்பகத்துறையில் முன்னோடி என்று கொண்டாடப்படும் திரு வை. கோவிந்தன். இந்த இருவருடைய பதிப்புக்களைத் தன்னுடைய சேகரத்தில் வைத்திருப்பதோடு, இருவருடனும் நேரில் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர் ஞானாலயா திரு பா.கிருஷ்ணமூர்த்தி

ஏ.கே செட்டியாரைப் பற்றி சென்னையில் அவர் நிகழ்த்திய உரை ஒன்றின் காணொளி இங்கே. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததுடன், அதை காணொளியாக வலையேற்றமும் செய்து வைத்திருக்கும் திரு பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்)அவர்களுக்கு நன்றியுடன்! போதுமான வெளிச்சம் இல்லை, முகம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் உரையாடல் மிகத் தெளிவாக இருக்கிறது. சுமார் ஒன்றரை மணிநேரப் பதிவு இது. கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது பொறுமையாகப் பார்க்கவும்.



இன்றைய தலைமுறைக்கு, உலகம் சுற்றிய தமிழரை, இவரை  விட வேறு யார் தான் இத்தனை சிறப்பாக அறிமுகம் செய்து வைத்து விட முடியும் என்று ஆச்சரியப்பட வைக்கிற வைக்கிற அளவுக்கு, அரிய தகவல்களோடு இந்த உரை இருக்கிறது.இந்த வலைப்பக்கங்களிலேயே, கூடிய விரைவில், புதிய ஆடியோ, வீடியோ பாட்காஸ்ட் வழியாக ஞானாலயா திரு பா.கிருஷ்ணா மூர்த்தி ஐயா உங்களோடு உரையாட வருவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த உரையாடலைக் கேட்டு விட்டு, உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், செய்வீர்கள்தானே?





4 comments:

  1. திரு தனபாலன்! முதல் வருகைக்கும், மின்னஞ்சலில் பதிவுகளைப் பெற ஆலோசனை சொன்னதற்கும் மிக நன்றி! விட்ஜெட்டை இணைத்தாயிற்று! நல்லதொரு பணியில் உங்களையும் இணைத்துக் கொண்டு ஞானாலயா பற்றிய இந்த வலைப்பக்கங்களை உங்கள் பதிவு, கூகிள் ப்ளஸ், மற்றும் தனிப்பட்ட அஞ்சலில் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்களேன்!

    ReplyDelete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...