Sunday 17 February 2013

திருப்பூரில் ஞானாலயா மழை - Dollar Nagaram - Gnanalaya B. Krishnamiirthy Part 1

திருப்பூரில் கடந்த 27.1.2013 அன்று நடந்த டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில், புதுக்கோட்டையில் இருந்து செயல்படும் ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

ஏறக்குறைய 50 நிமிடங்கள் புத்தகங்கள்,உலகளாவிய நூலகங்கள் குறித்து உரையாற்றிய காணொளியின் முதல் பகுதி இது.

பொதுவாக மேடைப் பேச்சு என்பது தற்காலத்தில் அலங்கார வார்த்தைகளால் கோர்த்து அது கேட்பவருக்கு பொழுது போக்க உதவும் கலையாக உள்ளது.  ஆனால் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் காணொளி காட்சிகளை கேட்டுப் பாருங்கள்.  

நீங்கள் இது வரையிலும் அறியாத தகவல்களாக , இன்று வரையிலும் புத்தகங்களில் வெளிவராத தகவல்களின் தொகுப்பாக, அறிவுக்களஞ்சியமாக ஒவ்வொரு தலைவர்களைப் பற்றியும், விசயங்களைப் பற்றியும் தனது கம்பீரமான குரலால் எடுத்து வைக்கின்றார்.

இதுவரையிலும் ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உலகம் முழுக்க பல்வேறு அமைப்புகளில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், பல்வேறு இலக்கிய அமைப்ப்புகளின் மூலம் 2000 கூட்டங்களுக்கும் மேல் பங்கெடுத்து தான் கற்ற புத்தக அறிவை மற்றவர்களுக்கு பரப்புவதை ஒரு கடமையாக வைத்துள்ளார்.  

தற்போது தான் அதன் காணொளி காட்சிகளை ஆவணப்படுத்துவதில் இந்த வலை தளம் சிறப்பாக செயலில் காட்டிக் கொண்டிருக்கின்றது.  

உங்கள் நண்பர்களுக்கும் ஞானாலயா குறித்து தெரிவிக்க இந்த வலைதளத்தை முழுமையாக படித்துப் பாருங்கள். நாம் சமூகத்திற்காக தனியாக சிறப்பாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இது போன்ற விசயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினாலே இதுவும் ஒருவிதமான சமூக அக்கறை தான்.

பகிர்ந்து கொள்வதில் அறிவு பகிர்தல் தான் தலைமுறைகள் தாண்டியும் நிற்கக்கூடியது.

வருகை புரிந்த உங்களுக்கு ஞானாலயா ஆய்வு நூலகம் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றி.  இரண்டாவது தொகுப்பு அடுத்த பதிவில் வெளியிடப்படும்.



No comments:

Post a Comment

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...