புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வார்த்தைகளில்..
”முதல் பதிப்பு நூல்களைக் கொண்டு வரவேண்டும் என்கிற அவசியம் என்னவென்றால் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்கள் போடு கிறார்கள். 120 பக்கம் உள்ள ஒரு நூல் அதே பெயரில் இப்போது வெறும் 45 பக்கங்கள் மட்டுமே இருக்கிறது. காலத்திற்கேற்றவாறு தங்கள் கருத் துகளை மாற்றி வெளியிடுகிறார்கள். அப்படி என்றால் அறிஞர் அண்ணா இந்த சமூகத்திற்கு என்ன சொல்லி வைத்தாரோ அது மறைக்கப்பட்டு விட்டன என்பதுதான் உண்மை. அவை எல்லா நூல்களிலும் நடந்து விடக்கூடும் என்பதால் முதல் பதிப்பு நூல்களைச் சேமித்து வைக்கிறேன்.”
“நூல்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏனென்றால் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்வது இந்த புத்தகங்கள் மட்டும் தான். அடுத்து வரும் தலைமுறையினர் உறுதி யான வரலாறுகளை அறிந்திருக்க வேண்டும். அதற்கு என்னாலான முயற் சியே இந்த நூலகம். பெரும்பாலும் புகழ் பெற்றவர்கள் இதழ்களில் எழுதி யவையே பின்னாளில் புத்தகங்களாக வெளியிடுகிறார்கள். ஆனால் சிற்றி தழ்கள் அப்படி அல்ல. சிற்றிதழ்களும் கருத்துப் பெட்டகங்கள்தான். அதனால் தான் அவற்றையும் சேமித்துப் பாதுகாத்து வருகிறேன்.”
* * * *
மிகப் பெரிய நூலகத்தைக் கண்ட மகிழ்ச்சியுடனும், பார்த்து வியந்த நெகிழ்ச்சியுடனும் நன்றி கூறி அங்கி ருந்து விடை பெற்றோம். இவ்வளவு அரிய பணியையும் ஏற்று தனது வயதுக்கு மீறிய பணிச்சுமையையும் ஏற்று தனது வருமானம் அனைத்தை யும் இந்த நூலகத்திற்கே செலவு செய்து நூலகத்தை நடத்தி வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவியார் டோரதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு நம்மா லான உதவிகளை ஒவ்வொருவரும் செய்ய முன்வர வேண்டும்.
விடுதலை தளத்தில் கட்டுரையின் சாராம்சத்தை படித்தீர்கள். விரிவான கட்டுரைக்கு கிளிக் பண்ணுங்க
சிறப்பாக வந்துள்ளது சிவா.
ReplyDeleteமகிழ்ச்சி ஜோதிஜி.. :)
ReplyDeleteதமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் ஓட்டுப்போட்டு சரிபார்க்குமாறு தோழமைகளை கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி