Thursday 25 October 2012

ஞானலயாவிற்கான ஸ்கேனர் முயற்சி

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்காக புதுக்கோட்டையில் ஒரு மருந்துக்கடை வைத்திருக்கும் லேனா என்று அழைக்கப்படும் இந்த நண்பர் ஒரு எளிய ஸ்கேனர் முன் மாதிரியைத் தானே வடிவமைத்திருக்கிறார்.

வெறும் பதினைந்து நாட்களில் ஒரு கார்பென்டரை உதவிக்கு வைத்துக் கொண்டு, திரு.லேனா இந்த முன்மாதிரியை உருவாக்கி இருக்கிறார்.மாதிரி ஸ்கேன்கள் நன்றாக, தெளிவாக இருக்கின்றன. இன்னமும் சில விஷயங்களை இணைக்க வேண்டும்.முக்கியமாக எல்ஈடி லைட்! இப்போது சென்னை மற்றும் பெருநகரங்களில் வாழ்கிற நண்பர்கள் பத்து வாட்ஸ் எல்ஈடி லைட் எங்கே கிடைக்கும், என்ன விலை என்பதைக் கொஞ்சம் விசாரித்துச் சொல்லி இந்த வேலையில் உதவ முடியும்.


                    (தான் தயாரித்த ஸ்கேனருடன் லேனா ஞானாலயாவில்..)

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்காக திரு லேனா வடிவமைத்துக் கொடுத்திருக்கிற ஸ்கேனரின் செயல் வடிவம் இது.Flatbed அல்லது V ஷேப் வடிவத்தில் 90-130 டிகிரி வரை சாய்வாக வைத்து ஸ்கேன் செய்யலாம். ஃபோகஸ் செய்வதற்கு உதவியாக உயரம் ஒன்றே முக்கால் அடியில் இருந்து மூன்றடி வரை வைத்துக் கொள்ள முடியும்.இங்கேயே நம்மால் செய்து காட்ட முடியும் என்பதை செயலில் நிரூபித்துக் காட்டியிருக்கும் திரு லேனா அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!


(ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா, நூலக உதவியாளர், ஸ்கேனர் உடன்)


புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் உதவிக் கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.நிதி வேண்டும்! நிதி மட்டுமே உதவாது! தகுந்த தொழில்நுட்ப உதவியும், மின்னாக்கம் செய்வதில் ஆர்வத்துடனுதவக் கூடிய நபர்களைப் புதுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் கண்டறிவது, என்று நிறைய வேலைகள் காத்திருக்கின்றன. திரு லேனா, ஞானாலயாவுக்கு உதவுவதில் ஒரு முன்னெட்டு என்று சொல்வதை விட, ஒரு புலிப்பாய்ச்சல் என்றே சொல்ல வேண்டும், சாதித்துக் காட்டியிருக்கிறார்! நீங்களும் பங்கெடுத்துச் செய்யலாமே!

6 comments:

  1. காமிரா எங்கே? என்ன காமிரா? மாதிரி ஸ்கேன் படம் கிடைக்குமா?

    ReplyDelete
  2. வெகு சிறப்பான முயற்சி. திரு லேனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. திவாஜி!

    இந்த ப்ரோடோ டைப்பில், பலவிதமான காமெராக்கள், செல் பொன், ஐ பேட் முதலானவற்றை வைத்து ஸ்கேன் செய்கிற மாதிரி உருவாக்கப் பட்டிருக்கிறது. இன்னும் பரிசோதனையில். இந்தப் பணியில் சேர்ந்து செயல்படுகிறவர்கள் அன்றிக்கு பொதுவில் அதிக விவரங்கள் தருவதற்கில்லை.

    திருமதி. கௌசல்யா!

    நிறைய வாய்ப்பேச்சு வீரர்களை பார்த்த பிறகு,இப்போது ஒரு செயல்வீரரை நம்முடைய முயற்சி முதன்முதலாக அடையாளம் கண்டிருக்கிறது. இதை வழக்கம்போல,நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு உதவுங்கள். நன்றி.

    ReplyDelete
  4. தங்களின் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் பகிருங்கள் (http://www.tamiln.org/)
    தமிழனின் நன்றிகள்...

    ReplyDelete
  5. நான் புதுக்கோட்டையில் தான் இப்போது வேலை செய்துகொண்டிருக்கிறேன்.. நமது ஞானாலயா நூலகத்திற்கு மின்னாக்கம் செய்யும் பணியில் என்னால் முடிந்தவரை பயன்படலாம் என்றிருக்கிறேன்.. rammars06@gmail.com இந்த மின்னஞ்சலில் என்னை தொடர்பு கொள்ளவும்.. நன்றி :-)

    ReplyDelete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...