Tuesday 19 March 2013

இதோ வரலாறு பேசுகிறது... தேவகோட்டையில் ஞானாலயா

மு.வ அவர்கள்தான் தமிழ் புலவர்கள் வரலாற்றில் மணிவிழா கொண்டாடாத மாமனிதர். சென்னை பல்கலைகழகத்தில்  ஆங்கில நூல் எழுதி முதல்முதலாக டாக்டர் பட்டம் பெற்றவரும் மு.வ தான்..

அதுமட்டுமல்ல.. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தால் முதன்முதலாய் அழைக்கப் பெற்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டவர் மு.வ அந்த விசயத்தை பத்திரிக்கைக்குக் கூட தெரிவிக்கவில்லை.

அவரை விமானநிலையத்தில் வழியனுப்பக்கூட யாரும் வருவதை அனுமதிக்கவில்லை. மவுண்ட்ரோடு விமானநிலைய அலுவலகத்துக்குக்கூட யாரையும் அனுமதிக்கவில்லை.

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது நடுவண் அரசு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்தது. இந்தப்போராட்டம் தமிழுக்கென நடந்துகொண்டிருக்கும்போது எனக்கு பத்மஸ்ரீ பட்டம் வேண்டாம் என்று சொன்னவர் மு.வ.

முதன் நான்குநிமிட உரை இது

##########

திரு.மில்லரின் மாணவர் பரிதிமாற்கலைஞர். வீ.கோ.சூரியநாராயண சாஸ்திரி. தனக்கு பாடம் எடுத்த மில்லரிடம் ஆங்கிலகவிஞர் டென்னிசின் ஒரு கவிதையை குறிப்பிட்டு பாராட்ட.. இதைவிட சிறந்த கவிதை இதற்கு 9 நூற்றாண்டுக்கு முன்னரே வந்த  கம்பராமாயணத்திலிருந்து இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி மில்லர் தமிழ் குறித்து பெருமைப்படச் செய்தவர் இவரே பரிதிமாற்கலைஞர் எனப் பெயரை மாற்றிகொண்டவர்.

1960 வரை தமிழுக்கு பாடுபட்டவர்களில் பலர் தமிழில் பாண்டித்யம் பெற்றவர்கள் அனைவருமே வழக்கறிஞர்களாக இருந்து வந்தவர்கள்தாம்.
வ.உ.சி முதல் இரா.பி.சேதுப்பிள்ளை வரை..வையாபுரிப்பிள்ளை, சோமசுந்தர பாரதி வரை விரும்பி தமிழ்த் தொண்டு செய்தனர்.

@@@@@@@@@@

மறைமலை அடிகள் என்ற வேதாச்சலம், 17 வயதில்1892 திருவனந்தபுரம் பல்கலைகழகத்தில் பேசச் செய்தனர். 1896 இந்த மறைமலை அடிகளை அழைத்துவந்து கிருத்துவகல்லூரியில் தமிழ்துறையில் பணியாற்றப் பணித்தவர் பரிதிமாற் கலைஞர்.

தமிழ்ச் செம்மொழி முழங்கியவர் பரிதிமாற்கலைஞர். செந்தமிழ் என்ற மாத இதழ், அச்சகம், துவங்கியவர்.

&&&&&&&&&&

 தொடர்ந்து ....திருக்குறளில் பரிமேழலகர் உரை நெருடிய இடஙளைச் சுட்டிக்காட்டி இரா.பி.சேதுப்பிள்ளை மூன்று மணிநேரம் பேசினார்.   இவர்கள் சொல்லியதை எல்லாம் தன்கருத்தாக ஒருவர் (?) எழுதிஉள்ள அவலமும் உண்டு என்பதை ஞானாலயா சொல்லும்போது  இரத்தம் துடிக்கிறது.

****************

 தமிழை வாழவைத்தவர்களின் வரலாற்றுகளை பதிவு செய்வதில் தமிழ் சமூகம் செய்து வரும் தவறை திரு. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சுட்டிக்காட்டும் விதம் நம் அடிமனதைத் தொடும்.

அரசியல் சார்ந்து அல்லாது அனைவரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் அனுபவங்களை, தமிழ் அச்சுத் துறை சார்ந்த முழுவரலாறுகளை அச்சிலேற்றாமலே தவறவிட்டுவிடுவோம் போன்றதொரு நிலைமை இருப்பதை உணர்வோம்

இவற்றை ஆவணப்படுத்தும் விதமாக இந்த வலைதளம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தை வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல நமது பங்களிப்பு என்ன என்ற சிந்தனை இந்த .உரையைக் கேட்டால் உங்களுக்குள் பெருக்கெடுத்து வரும் என்ற உறுதியை அளிக்கிறேன்.





தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவை சார்பாக 9.03.2013 பேசிய உரை..

இதோ உங்களுக்காக...






ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற எண்ணத்தில்.. 
நிகழ்காலத்தில் சிவா

  உங்களின் கருத்துகளை தெரிவிக்கவும் என்ன உதவிகள் தேவைப்படும் என அறிந்து நேரடியாக உங்கள் பங்களிப்பைச் செய்யவும்..

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலம்

6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 

புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.



தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140




No comments:

Post a Comment

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...