Tuesday, 19 March 2013

இதோ வரலாறு பேசுகிறது... தேவகோட்டையில் ஞானாலயா

மு.வ அவர்கள்தான் தமிழ் புலவர்கள் வரலாற்றில் மணிவிழா கொண்டாடாத மாமனிதர். சென்னை பல்கலைகழகத்தில்  ஆங்கில நூல் எழுதி முதல்முதலாக டாக்டர் பட்டம் பெற்றவரும் மு.வ தான்..

அதுமட்டுமல்ல.. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தால் முதன்முதலாய் அழைக்கப் பெற்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டவர் மு.வ அந்த விசயத்தை பத்திரிக்கைக்குக் கூட தெரிவிக்கவில்லை.

அவரை விமானநிலையத்தில் வழியனுப்பக்கூட யாரும் வருவதை அனுமதிக்கவில்லை. மவுண்ட்ரோடு விமானநிலைய அலுவலகத்துக்குக்கூட யாரையும் அனுமதிக்கவில்லை.

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது நடுவண் அரசு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்தது. இந்தப்போராட்டம் தமிழுக்கென நடந்துகொண்டிருக்கும்போது எனக்கு பத்மஸ்ரீ பட்டம் வேண்டாம் என்று சொன்னவர் மு.வ.

முதன் நான்குநிமிட உரை இது

##########

திரு.மில்லரின் மாணவர் பரிதிமாற்கலைஞர். வீ.கோ.சூரியநாராயண சாஸ்திரி. தனக்கு பாடம் எடுத்த மில்லரிடம் ஆங்கிலகவிஞர் டென்னிசின் ஒரு கவிதையை குறிப்பிட்டு பாராட்ட.. இதைவிட சிறந்த கவிதை இதற்கு 9 நூற்றாண்டுக்கு முன்னரே வந்த  கம்பராமாயணத்திலிருந்து இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி மில்லர் தமிழ் குறித்து பெருமைப்படச் செய்தவர் இவரே பரிதிமாற்கலைஞர் எனப் பெயரை மாற்றிகொண்டவர்.

1960 வரை தமிழுக்கு பாடுபட்டவர்களில் பலர் தமிழில் பாண்டித்யம் பெற்றவர்கள் அனைவருமே வழக்கறிஞர்களாக இருந்து வந்தவர்கள்தாம்.
வ.உ.சி முதல் இரா.பி.சேதுப்பிள்ளை வரை..வையாபுரிப்பிள்ளை, சோமசுந்தர பாரதி வரை விரும்பி தமிழ்த் தொண்டு செய்தனர்.

@@@@@@@@@@

மறைமலை அடிகள் என்ற வேதாச்சலம், 17 வயதில்1892 திருவனந்தபுரம் பல்கலைகழகத்தில் பேசச் செய்தனர். 1896 இந்த மறைமலை அடிகளை அழைத்துவந்து கிருத்துவகல்லூரியில் தமிழ்துறையில் பணியாற்றப் பணித்தவர் பரிதிமாற் கலைஞர்.

தமிழ்ச் செம்மொழி முழங்கியவர் பரிதிமாற்கலைஞர். செந்தமிழ் என்ற மாத இதழ், அச்சகம், துவங்கியவர்.

&&&&&&&&&&

 தொடர்ந்து ....திருக்குறளில் பரிமேழலகர் உரை நெருடிய இடஙளைச் சுட்டிக்காட்டி இரா.பி.சேதுப்பிள்ளை மூன்று மணிநேரம் பேசினார்.   இவர்கள் சொல்லியதை எல்லாம் தன்கருத்தாக ஒருவர் (?) எழுதிஉள்ள அவலமும் உண்டு என்பதை ஞானாலயா சொல்லும்போது  இரத்தம் துடிக்கிறது.

****************

 தமிழை வாழவைத்தவர்களின் வரலாற்றுகளை பதிவு செய்வதில் தமிழ் சமூகம் செய்து வரும் தவறை திரு. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சுட்டிக்காட்டும் விதம் நம் அடிமனதைத் தொடும்.

அரசியல் சார்ந்து அல்லாது அனைவரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் அனுபவங்களை, தமிழ் அச்சுத் துறை சார்ந்த முழுவரலாறுகளை அச்சிலேற்றாமலே தவறவிட்டுவிடுவோம் போன்றதொரு நிலைமை இருப்பதை உணர்வோம்

இவற்றை ஆவணப்படுத்தும் விதமாக இந்த வலைதளம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தை வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல நமது பங்களிப்பு என்ன என்ற சிந்தனை இந்த .உரையைக் கேட்டால் உங்களுக்குள் பெருக்கெடுத்து வரும் என்ற உறுதியை அளிக்கிறேன்.





தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவை சார்பாக 9.03.2013 பேசிய உரை..

இதோ உங்களுக்காக...






ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற எண்ணத்தில்.. 
நிகழ்காலத்தில் சிவா

  உங்களின் கருத்துகளை தெரிவிக்கவும் என்ன உதவிகள் தேவைப்படும் என அறிந்து நேரடியாக உங்கள் பங்களிப்பைச் செய்யவும்..

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலம்

6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 

புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.



தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140




Saturday, 16 March 2013

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞானாலயா

நாளை ஞாயிறு 17/03/2013 காலை 10.30 முதல் 11.00 வரை புதிய தலைமுறை டிவியில்

 “களம் இறங்கியவர்கள்” என்ற தலைப்பில்

புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை ஒளிபரப்பாகிறது.

வாய்ப்பு இருக்கிறவர்கள் பார்த்து பயனடையுங்கள். அனைவருக்கும் தகவலைக் கொண்டு சேருங்கள்

  மேலும் விபரங்களுக்கு..


ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

Monday, 11 March 2013

புதுக்கோட்டை வரலாறு - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரை 03/03/2013

புதுக்கோட்டை பர்மாவில் இருந்து வந்து 1934 ல் ஒரு இலட்சம் முதலீடு செய்து தமிழ் பத்திரிக்கை உலகில் மறுமலர்ச்சியை தோற்றுவித்த வை.கோவிந்தன் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான்

 பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம்.
பாரி நூல்நிலையம்
வானதி திருநாவுக்கரசு
தமிழ்வாண்ன்
போன்றவர்கள்.  இவர்கள் எல்லோரும் வை.கோவிந்தன் அவர்களிடம் பணிபுரிந்தவர்கள்

அதுமட்டுமல்ல.. குழந்தைகளுக்கென தனி இதழ், மங்கையர்க்கென தனி இதழ்.,
தோற்றுவித்ததும் இவர்தான்


புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மட்டும் யுத்தகாலத்தில் அச்சகங்களுக்கான பேப்பர் கட்டுபாடு இல்லை.  ..

தொடர்ந்து புதுக்கோட்டை நகர வரலாற்று ஆதியோடு அந்தமாக தெரிந்துகொள்ள உரையைக் கேளுங்கள்



புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கடந்த 3.3.2013 அன்று நடந்த விழாவில் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இந்த உரை சுமார் ஒரு மணிநேரம் பத்துநிமிடம் ஓடக்கூடியது. பொறுமையாக கேட்டு அரிய விசயங்களை கேளுங்கள்.



ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற் எண்ணத்தில்..
நிகழ்காலத்தில் சிவா



Sunday, 3 March 2013

அணையா விளக்கு - பாரதி பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரை

செப்டம்பர் 15 ஞாயிறு  அன்று அணையா விளக்கு பாரதி என்ற பொருளில் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரையின் சில சுவாரசியமான பகுதிகள் இங்கே..

உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் 12 நாளில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார். இதற்கு முன்னதாக வேறு மொழிபெயர்ப்பு வந்திருந்தாலும் இதன் சிறப்பு என்னவென்றால் 80 பக்க முன்னுரைதான். அதில் ஆதிகவியான ஹேமரில் இருந்து சமகால கவியான தாமஸ் வரை சொன்னவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டு, திருக்குறள் காலம் கடந்த ஒன்றாக, வென்றதாக இருக்கிறது என்று தெளிவு படுத்தி இருக்கிறார். இந்த சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு அடக்குமுறைக்கு ஆட்பட்டுவிடாமல் தப்பிக்க பாண்டிச்சேரியில் இவரை அடைக்கலம் ஆக உதவியவர் பாரதி.
                                                     *   *  *  *
16 மொழி கற்றுத் தேர்ந்தவர் பாரதி, தமிழில்தான் எழுதவேண்டும், பேச வேண்டும் என்ற இருந்ததோடு பல செயல்திட்டங்களையும் வகுத்து செயல்படுத்தினார். அப்படி அறிவியல் சொற்களை தமிழ்படுத்துவது முடியாது என ஒருவர் சொல்ல, மெல்லத் தமிழ் இனி சாகும் என அந்த பேதை சொன்ன சூழல் என்ன ?  எட்டுத்திக்கும் செல்வீர் என்ற கவிதை பிறந்த வரலாறு அறிய உரையைக் கேளுங்கள் :)

                                                *      *      *

அன்னிபெசண்ட் அம்மையார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை தத்து எடுத்துக்கொண்டது வழக்காக மாறுகிறது. இதைப்பற்றி பாரதி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதற்கு 500 பிரதிகள் மொத்தமாக ஆர்டர் வருகிறது, அந்த ஆர்டரை பூர்த்தி செய்தால் பாரதி வீட்டில்  இரண்டுமாதம் அடுப்பெரியும். ஆனால் பாரதியோ முழுமையாக என்னை ஈடுபடுத்தி எழுதிய பாஞ்சாலி சபதத்தை வாங்க நாதியில்லை. பொழுதுபோக்காக எழுதியதை 500 பிரதிகள் கேட்டால் என்ன அர்த்தம். இல்லை என்று சொல்லிவிடு என்றார்.

காசுக்காக எதையுமே எழுதியதில்லை. எழுதியது எதையுமே காசாக்கவும் விரும்பியதில்லை பாரதி.  தொடர்ந்து படிக்க ஆர்வமா?

இதோ ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சேமிப்பில் இருந்த இந்த ஒலிப்பதிவை கேளுங்கள்...ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவாற்றல் சிறப்பினை அறியுங்கள். முடிந்தால் ஒருமுறை நேரில் செல்லுங்கள், நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கூடவே நூலகத்திற்கு எந்தவகையில் உதவமுடியும் என்றும் பாருங்கள்.



இந்த விபரங்கள் எல்லோருக்கும் சென்று சேர ஓட்டுப்பட்டைகளில் வாக்களியுங்கள். பேஸ்புக், கூகுள் பிளஸ், டிவீட்டர் போன்ற் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் வரும்காலத்தில் ஞானாலயா என்று தேடினால் இந்த பொக்கிஷங்கள் தேடுவோருக்கு கிடைக்கும். இதுவும் கூட நம் தமிழுக்கு நாம் செய்யும் தொண்டுதான்..




ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற் எண்ணத்தில்.. 
நிகழ்காலத்தில் சிவா


 மேலும் விபரங்களுக்கு..

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140


Thursday, 28 February 2013

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிறப்புரை

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்திற்கு திடீர் பயணமாக 27.02.2013 அன்று நேரில் சென்றிருந்தேன். இந்த நூலகம் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். பயனாக வேண்டும் என்ற திரு.கிருஷ்ணமூர்த்தி ஞானாலயா அவர்களின் ஆர்வத்தை ஆசையை நோக்கத்தை பலமுறை கேட்டு இருக்கிறேன்.

நூலகத்தில் சுமார் 80 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு புத்தகத்தின் பின்னாலும் ஒரு எழுதப்படாத சரித்திரம் இருக்கிறது. அந்த புத்தகம் எந்த சூழலில் எழுதப்பட்டது. எந்த சூழலில் பதிப்பிக்கப்பட்டது. அந்த ஆசிரியர், பதிப்பகத்தார் குறித்த எங்குமே கிடைக்காத பல அரிய செய்திகள் திரு.ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கொட்டிக்கிடக்கின்றன.

ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு ஆவணம். அவற்றை சேமிக்க வேண்டியதன் அவசியம் அந்த உரைகளைக் கேட்டால் விளங்கும்.  வீடியோ உரைகளாக சேமிக்க திட்டமிட்டாலும் அதற்கான செலவுகள், மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், தேவைப்படும் தன்னார்வத் தொண்டர்கள் இவற்றை எல்லாம் மனதில் கொண்டு  ஆடியோ வடிவிலான உரைகளை சேமிக்க எண்ணம் கொண்டேன்.

அதற்கான சில உபகரணங்களை வாங்கிக்கொண்டு நேரில் சென்று மாதிரி ஒலிப்பதிவு ஒன்றை முயற்சித்துப் பார்த்தேன். நான் நினைத்தை விட ஒலி துல்லியம் கிடைத்தது. அதை அனைவருக்கும் சென்று சேர்க்க எண்ணி இங்கு பதிவிட்டு இருக்கிறேன், இதில் விவேகாநந்தர், மேக்ஸ்முல்லர் பற்றி கொஞ்சமாக பேசி இருக்கிறார்.

இந்த முயற்சி தொடரும்.,, இதற்கான நண்பர்கள் குழு சேர்க்கவும் எண்ணமிட்டு இருக்கிறேன். வரும்காலத்தில் ஞானாலயாவிற்கு எந்தவிதத்தில் முடியுமோ அவ்விதமாக..உதவும் வகையில் ஒத்த எண்ணமுடையோர்களை இணைத்து குழுவாக்க ஆசைப்படுகிறேன்.




உரையை கேட்டீர்களா.. இனி இது போன்ற உரைகள், புதிய இடுகைகள் இந்த வலைதளத்தில் வலையேற்றம் செய்யும்போது உங்களுக்கு உடனடியாக செய்தி தர உங்கள் மெயில்முகவரியை என் arivhedeivam@gmail.com க்கு அனுப்புங்கள்.

Monday, 18 February 2013

The Pudukottai book collector

கோவையில் கடந்த 10ம் தேதி நடந்த நிகழ்வில் திரு. கிருஷ்ணமூர்த்தி அய்யா பேசிய உரை ஏற்கனவே முந்தய இடுகைகளில் பகிர்ந்திருக்கிறோம். அந்த நிகழ்வைப் பற்றி தி ஹிந்து நாளிதழில் வெளியான செய்தி இதோ....

B. Krishnamurthy has set up one of the country’s largest private libraries housing rare first editions of Tamil books.

 

 Arignar Anna had a knack for narrating a story. He would take his listeners to far off places before leading them to the crux of the matter. “He would give them extensive background details… and they would wonder where he was headed,” recalls ‘Gnanalaya’ B. Krishnamurthy.

 Krishnamurthy owns the precious first edition of Anna’s book Makkal Karamum Mannin Siramum . It is among the 85,000 titles in his research library ‘Gnanalaya’ in Pudukottai. Krishnamurthy was in the city to participate in a monthly literary meet organised by the District Central Library’s Reader’s Circle and Vijaya Pathipagam.

 With over 15,000 titles in English and 70,000 in Tamil, Gnanalaya has a large collection of rare first editions of Tamil books. Krishnamurthy’s quest for books started when he was a teenager. His father once gave him a copy of Thanippadal Thirattu . It was signed by Ku. Alagirisamy, the editor of the magazine Sakthi . Alagirisamy, a man of unshakeable determination, had mentioned that the book was extremely rare and that he hadn’t seen it anywhere else. But there it was, in the hands of a teenager in Trichy. Krishnamurthy decided then that he would seek every rare book there was, no matter what.

 Today, his research library in Pudukottai is the result of decades of hard work. Krishnamurthy has travelled to every nook and cranny of Tamil Nadu in search of books. Behind every painstakingly collected title is a story.

 He once went to a village near Nagercoil looking for a book. He had a long way to go and decided to hire a bicycle. The man who ran the rental didn’t trust him, so Krishnamurthy gave him his expensive watch in return. “I would’ve even given him the shirt off my back if I had to,” he smiles.

Gnanalaya draws visitors from all over the world — there are some that Krishnamurthy will never forget. “I once heard one of them comment, ‘this man must be mad’,” he laughs.

நன்றி: தி ஹிந்து ஆங்கில நாளிதழ்

ஞானாலயாவைப் பற்றி தினகரன் 17/02/2013

இது எங்களின் தனிப்பட்ட சொத்தல்ல..சமூகத்துக்கானது..எல்லோரும் இதை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு எங்கள் பொறுப்பில் இலவசமாக தங்குமிட வசதிகளை செய்து தருகிறோம். நூலகத்தை பயன்படுத்துவதற்காக யாரிடமும் பணம் வாங்குவதில்லை. மனமுவந்து உதவுபவர்களிடம் பெற்றுக்கொள்கிறேன்- இது ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வார்த்தைகள்.. முழுபேட்டி தினகரன் வசந்தம் இணைப்பில் கீழே..
அடுத்த பக்கம்

ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற் எண்ணத்தில்.. நிகழ்காலத்தில் சிவா

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...