Thursday 28 February 2013

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிறப்புரை

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்திற்கு திடீர் பயணமாக 27.02.2013 அன்று நேரில் சென்றிருந்தேன். இந்த நூலகம் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். பயனாக வேண்டும் என்ற திரு.கிருஷ்ணமூர்த்தி ஞானாலயா அவர்களின் ஆர்வத்தை ஆசையை நோக்கத்தை பலமுறை கேட்டு இருக்கிறேன்.

நூலகத்தில் சுமார் 80 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு புத்தகத்தின் பின்னாலும் ஒரு எழுதப்படாத சரித்திரம் இருக்கிறது. அந்த புத்தகம் எந்த சூழலில் எழுதப்பட்டது. எந்த சூழலில் பதிப்பிக்கப்பட்டது. அந்த ஆசிரியர், பதிப்பகத்தார் குறித்த எங்குமே கிடைக்காத பல அரிய செய்திகள் திரு.ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கொட்டிக்கிடக்கின்றன.

ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு ஆவணம். அவற்றை சேமிக்க வேண்டியதன் அவசியம் அந்த உரைகளைக் கேட்டால் விளங்கும்.  வீடியோ உரைகளாக சேமிக்க திட்டமிட்டாலும் அதற்கான செலவுகள், மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், தேவைப்படும் தன்னார்வத் தொண்டர்கள் இவற்றை எல்லாம் மனதில் கொண்டு  ஆடியோ வடிவிலான உரைகளை சேமிக்க எண்ணம் கொண்டேன்.

அதற்கான சில உபகரணங்களை வாங்கிக்கொண்டு நேரில் சென்று மாதிரி ஒலிப்பதிவு ஒன்றை முயற்சித்துப் பார்த்தேன். நான் நினைத்தை விட ஒலி துல்லியம் கிடைத்தது. அதை அனைவருக்கும் சென்று சேர்க்க எண்ணி இங்கு பதிவிட்டு இருக்கிறேன், இதில் விவேகாநந்தர், மேக்ஸ்முல்லர் பற்றி கொஞ்சமாக பேசி இருக்கிறார்.

இந்த முயற்சி தொடரும்.,, இதற்கான நண்பர்கள் குழு சேர்க்கவும் எண்ணமிட்டு இருக்கிறேன். வரும்காலத்தில் ஞானாலயாவிற்கு எந்தவிதத்தில் முடியுமோ அவ்விதமாக..உதவும் வகையில் ஒத்த எண்ணமுடையோர்களை இணைத்து குழுவாக்க ஆசைப்படுகிறேன்.




உரையை கேட்டீர்களா.. இனி இது போன்ற உரைகள், புதிய இடுகைகள் இந்த வலைதளத்தில் வலையேற்றம் செய்யும்போது உங்களுக்கு உடனடியாக செய்தி தர உங்கள் மெயில்முகவரியை என் arivhedeivam@gmail.com க்கு அனுப்புங்கள்.

1 comment:

  1. அன்பின் சிவா - அரிய செயல் - வெற்றி பெற - சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - என்னால் இயன்ற வரை உதவ எண்ணுகிறேன். குழுவினில் என்னை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...