Friday 24 May 2013

பெருந்தலைவர் காமராசரைப் பற்றி புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரை

தற்போதைய அரசியல் நிலவரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகள் என்பது வெறுமனே அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின் போதும், நாங்கள் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற அறைகூவல் வழியாகவும் மட்டுமே நம்மால் காமராஜர் என்ற பெயரை நினைவில் கொண்டு வர முடிகின்றது.

திரு. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு காமராஜர் நூற்றாண்டு விழாவில் புதுக்கோட்டையில் உரையாற்றிய இந்த ஒலித் தொகுப்பை நீங்கள் முழுமையாக கேட்டு முடியும் போது ஏறக்குறைய சுதந்திரத்திற்கு பின்னால் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் நிலவரங்களை நம்மால் முழுமையாக உணர முடியும்.

 கர்மவீரர் காமராஜர் குறித்து நூறு புத்தகங்கள் படித்த திருப்தி நிச்சயம் முழுமையாக கிடைக்கும். அந்த அளவிற்கு மிகத் தெளிவாக அழகாக திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரையாற்றியுள்ளார்.

பட்டங்களை விரும்பாத காமராஜர் அவர்களுக்கு பெருந்தலைவர் பட்டம் எப்படி வந்தது? யார் முதலில் அவ்வாறு அழைத்தவர்? இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது. எப்படி மீண்டும் சேர்ந்தது? என்ன காரணம்?


 செய் என்பதுதான் காமராசரின் தாரக மந்திரம். செய்ததை சொல்லிக்கொண்டிருப்பதை விட விசயத்துக்கு நேரடியாக வர சொல்லித்தான் எதிரே இருப்பவரிடம் சொல்வார். காமராசர் எப்படி என்னை ஈர்த்தார் என்று ஜெயகாந்தன் சொன்னது என்ன?

இந்திரா காந்தி அம்மையாரை காமராஜர் எப்போதும் அந்த பொம்பள என்று தான் அழைப்பார்.அதே இந்திரா காந்தி தமிழ்நாட்டில் இவர் இல்லாவிட்டால் நிச்சயம் நாம் இல்லை என்கிற அளவுக்கு காமராஜர் எப்படி கிங் மேக்கராக இருந்தார்.

திராவிட கட்சிகள் காமராஜர் மேல் வலிய திணித்த ஊழல் புகார்கள் குறித்து காமராஜரிடம் கேட்ட போது அவர் மிக எளிமையாக யானைக்கால் நோய்க்காரன் எல்லோரிடமும் கொண்டு போய் காட்டிக் கொண்டு இருப்பானா? என்கிற துணிச்சல் நிறைந்த பதில் போன்றவற்றை நீங்கள் அவசியம் கேட்டு உணர இந்த ஒலித் தொகுப்பை முழுமையாக கேட்க வேண்டும் என்று விரும்புகின்றோம். தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள குமரி அனந்தன் முதல் பல தலைவர்களும் நாங்கள் கூட இந்த அளவுக்கு காமராஜர் குறித்து பேச முடிந்ததில்லை.  அந்த அளவுக்கு பல தகவல்களை மிக சிறப்பாக பேசியுள்ளீர்கள் என்று பாராட்டிய இந்த உரையை கேட்டு மகிழ அழைக்கின்றோம்.



ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற எண்ணத்தில்.. 
நிகழ்காலத்தில் சிவா


 மேலும் விபரங்களுக்கு..




ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

1 comment:

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...