சுமார் இருபது மாதங்களுக்கு முன்னால், புதுக்கோட்டை ஞானாலயா குறித்த ஒரு அருமையான செய்தி கட்டுரை ஹிந்து நாளிதழில், ஒலிம்பியா ஷில்பா ஜெரால்ட் எழுதியதை நண்பர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக–ஞானாலயா குறித்த தெளிவான சித்திரத்தை உங்களுக்கு இந்த செய்திக் கட்டுரை கொடுக்கும் என்றே நம்புகிறேன்.
ஞானாலயா, அரசு, பல்கலைக் கழக நூலகங்கள் செய்ய முடியாத அல்லது செய்ய முனையாத அபூர்வமான புத்தக சேகரமாக இன்றைக்கு திருமதி டோரதி- கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரின் தொடர்ச்சியான உழைப்பினால் உருவாகியிருக்கிறது.இந்தப் புத்தக சேகரத்தைப் பயன் படுத்திக் கொள்ளாத அரசியல், இலக்கியப் பிரபலங்களே அனேகமாக இல்லையென்று சொல்லி விடலாம்!பழைய இலக்கியங்கள், நூல்கள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்களுக்குக் கற்பகத் தருவாக, இந்த ஆய்வு நூலகம் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
எழுபது வயதிலும் இதன் நிறுவனர் திரு பா.கிருஷ்ணமூர்த்தி,தேனீ போல சுறுசுறுப்பாக இன்னமும் புத்தகங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார். நூல்களைக் குறித்து பதிப்பிக்கப்பட்ட விதம் குறித்து சுவாரசியமான தகவல்களை ஆர்வத்தோடு பலருடன் தனியாகவும் விழா மேடைகளிலும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.எழுதப்பட்ட நூல்களைக் குறித்த இவரது வாய்மொழித் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டிய வரலாற்றுத் தொகுப்பாகவும் இருக்கிறது.
புதுக்கோட்டை ஞானாலயா வெறும் நூல்களை சேகரிக்கும் கிடங்கி அல்ல!எந்தப்புத்தகத்தில் என்ன எழுதப் பட்டிருக்கிறதென்றே தெரியாத நூலகர்களைக் கொண்டிருக்கும் நூலகமும் அல்ல! ஒரு ஆராய்ச்சிக் கருவூலம்! மிகக் கவனமாகத் தகவல்களைத் தலைப்பு வாரியாகத் தொகுத்து வைத்திருக்கும் ஒரு அறிவுக் களஞ்சியம்!
ஞானாலயா, தன்னுடைய சேவையை விரிவுபடுத்தவும், சேகரத்தில் உள்ள புத்தகங்களை மின்னாக்கம் செய்வதிலும், அதிகரித்து வரும் புத்தகங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் புதிய கட்டடமொன்றை மாடியில் கட்டுவதற்காகவும், இன்னமும் அதிக அளவில் தேடி வருவோருக்குப் பயன்படும் விதத்தில் நூலகத்தைக் கணினிமயமாக்கவும், அதன் செலவினங்களுக்காகவும் உங்கள் ஒவ்வொருவரது உதவிக் கரங்களையும் எதிர்பார்க்கிறது.
எவ்வளவு சிறிய தொகையாக இருந்தபோதிலும், உங்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இந்த அறிவுக் களஞ்சியத்தைப் பாதுகாப்பதிலும், முன்னெடுத்துச் செல்வதிலும் இருக்க வேண்டும் என்று உங்களை இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறோம். இந்தத் தகவல்களை, உங்களுடைய கூகிள் ப்ளஸ், வலைப்பதிவுகள், தனிப்பட்ட முறையில் நண்பர்களுக்கு மின்னஞ்சல் என்ற வகையில் பகிர்ந்து கொள்ளவும் வேண்டிக் கொள்கிறோம். ஊருக்கே நீர் தரும் ஊருணியாக குறுகி நிற்காமல், தமிழ்கூறும் நல்லுலகத்துக்கே அறிவுக் கேணியாக இருக்கும் இந்த ஞான தீபத்தை ஏந்திச் செல்வது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா,
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140
மொபைல்: (0) 9965633140
e-mail: gnanalayapdk@gmail.com
வங்கி விவரம்:
Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
IFS CODE: UCBA0000112
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
IFS CODE: UCBA0000112
பண்புடன் கூகிள் வலைக் குழுமம் மற்றும் வல்லமை மின்னிதழில் வெளியான செய்திக் கட்டுரையின் மீள்பதிவு. கட்டுரையாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
No comments:
Post a Comment