தமிழ் நாட்டில் ஞானாலயா ஒரு வித்தியாசமான தமிழ் ஞானப் பணி! - முனைவர். செ. அ. வீரபாண்டியன் -
அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்துள்ள சுமார் 500க்கும் அதிகமான மறுபதிப்புகளின் மூலநூல்கள் ஞானாலயாவிடமிருந்தேப் பெறப்பட்டன. சக்தி கோவிந்தன் இலக்கியப் படைப்புகளை நாட்டுடைமையாக்கி, வறுமையில் உழன்ற அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிதி உதவக் காரணமாக இருந்தது ஞானாலயா. சுந்தர ராமசாமி தன் கதைத்தொகுப்பு முயற்சியின்போது தன்னிடமில்லாத பல கதைகளை பெற்ற இடம் ஞானாலயா.
ஆரவாரமின்றி அமைதியாக இது போன்று பல தமிழ்ஞானப் பணிகளை பா.கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதியினர் ஆற்றி வருவதைக் கண்ணுற்ற தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் கீழ்வரும் கருத்தினைப் பதிவு செய்துள்ளார். '' எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் கிருஷ்ணமூர்த்தி-டோரதி தம்பதியருக்கு பத்மபூஷன் விருது கிடைக்கச் செய்திருப்பேன்.''. பத்மபூஷன் விருது என்பது இந்திய அரசின் உயர்ந்தபட்ச விருதாகும்
விரும்பித்தரும் நன்கொடைகளைக் கொண்டு ஞானாலயாவினை நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் விரிவுபடுத்தும் முயற்சியிலும், தங்கள் காலத்திற்குப் பின்னும் இத்தமிழ்ஞானப் பணிகள் தொடர ஞானாலயாவை ஒரு பொது அறக்கட்டளையாக மாற்றும் முயற்சிகளிலும் கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர்.
ஞானாலயா முகவரி:
ஞானாலயா ஆய்வு நூலகம்,
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம் அஞ்சல்,
புதுக்கோட்டை, 622002 இந்தியா
தொலைபேசி: +91 4322221059.
Gnanalaya Research Library,
6, Pazhaniyappa Nagar, Thirukkokarnam,
Pudukkottai, 622002, India.
Phone: +91 4322221059.
ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் வேண்டும் என்ற வேண்டுகோள் பலராலும் நீண்டகாலமாகவே பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் பதிவுகள் இணைய தளத்தில் 2007 நவம்பர் இதழில் வெளிவந்த ஒரு சிறு கட்டுரை.இங்கே பதிவுகள்,வ ந கிரிதரனுக்கும் கட்டுரை எழுதிய முனைவர். செ. அ. வீரபாண்டியன் இருவருக்கும் நன்றியுடன்!
http://www.geotamil.com/pathivukal/gnanalaya_research_library.htm
No comments:
Post a Comment