வருகின்ற ஆகஸ்டு16 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் தனிநபர் முயற்சியினால் விளைந்த நூலகம், அதிலும் பெரும்பான்மை மூலவடிவிலான முதல்பதிப்பு நூல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இந்த முயற்சி கடந்த 60 ஆண்டுகால சேமிப்பாகும்..
அவரது 75 வது வயதினை ஒட்டி பவளவிழா கொண்டாட்டம் நிகழ இருக்கின்றது. அப்போது விழாமலர் வெளியீடு மற்றும் நூல்கள் வெளியீடு , கூடுதலாக தனது வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் நூலகத்திற்கு விருப்பத்துடன் இன்றும் செலவிட்டுக்கொண்டிருக்கின்ற அவரைப் பாராட்டும்விதமாக நூலகவளர்ச்சி நிதி வழங்கல் என சிறப்பாக விழா நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு நடக்கவிருக்கின்றன.
வாசிப்பில் ஆர்வமுடையோர் அனைவரோடும் இந்த தகவலை பகிர்ந்து கொள்வதோடு ஆகஸ்டு 16, 2015 அன்று மாலை இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
தங்களின் பார்வைக்கு கீழே அழைப்பிதழ்
நன்றி
நிகழ்காலத்தில் சிவா
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி,
ஞானாலயா ஆய்வு நூலகம்,
6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140
“ஞானாலயா“ பவளவிழா அழைப்பிதழை எனது வலைப்பக்கத்தில் எடுத்துப் போட்டிருக்கிறேன். இணைப்பும் தந்திருக்கிறேன்.
ReplyDeleteஅவர்கள் வாழ்க! நூலகம் வளர்க! அவர்களுக்கு என் அன்பு வணக்கம். அழைப்பிதழில் இணையத் தொடர்புகளையும் பயன்படுத்தியிருக்கலாம்.
எனது வலைப்பக்கத்தில் ஞானாலயா அழைப்புப் பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2015/08/blog-post_94.html நன்றி.
பகிர்வுக்கு நன்றி திரு.முத்துநிலவன் அவர்களே..இனிவரும் காலங்களில் இணையதள விபரங்களை முழுமையாக இடம்பெறச் செய்வோம்
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteநிச்சயம் நிகழ்வில் கலந்து கொள்வோம்
அன்புமிக்க அய்யாவுக்கும், அம்மா திருமதி.டோரதி அவர்களுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் உரித்தாக்குகின்றேன். தங்கள் பணி மேலும் சிறப்புற்று அனைத்து தமிழ் நெஞ்சங்களில் மகிழ்ச்சியையும், குளிர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டுகின்றேன். நன்றி. வணக்கம். - கிருஷ்.இராமதாஸ், துபாய் [பெரம்பலூர்].
ReplyDelete