இன்று மாலை புதுக்கோட்டையில் நிகழும் ஞானாலயா விழா நிகழ்வுகள் நடக்கின்றன..ஞாபகப்படுத்தலுக்காக
விழாவில் வெளியாக இருக்கும் மூன்று நூல்கள்
வாருங்கள். மறக்கவியலா அனுபவத்தை பெறுங்கள்
Sunday, 16 August 2015
Monday, 3 August 2015
வருகின்ற ஆகஸ்ட் 16, ஞானாலயா பவளவிழா அழைப்பிதழ்
வருகின்ற ஆகஸ்டு16 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் தனிநபர் முயற்சியினால் விளைந்த நூலகம், அதிலும் பெரும்பான்மை மூலவடிவிலான முதல்பதிப்பு நூல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இந்த முயற்சி கடந்த 60 ஆண்டுகால சேமிப்பாகும்..
அவரது 75 வது வயதினை ஒட்டி பவளவிழா கொண்டாட்டம் நிகழ இருக்கின்றது. அப்போது விழாமலர் வெளியீடு மற்றும் நூல்கள் வெளியீடு , கூடுதலாக தனது வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் நூலகத்திற்கு விருப்பத்துடன் இன்றும் செலவிட்டுக்கொண்டிருக்கின்ற அவரைப் பாராட்டும்விதமாக நூலகவளர்ச்சி நிதி வழங்கல் என சிறப்பாக விழா நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு நடக்கவிருக்கின்றன.
வாசிப்பில் ஆர்வமுடையோர் அனைவரோடும் இந்த தகவலை பகிர்ந்து கொள்வதோடு ஆகஸ்டு 16, 2015 அன்று மாலை இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
தங்களின் பார்வைக்கு கீழே அழைப்பிதழ்
நன்றி
நிகழ்காலத்தில் சிவா
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி,
ஞானாலயா ஆய்வு நூலகம்,
6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140
Subscribe to:
Posts (Atom)
ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...

-
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...
-
திரு சுந்தரராமன் அவர்களின் வலைப் பக்கங்களில் இருந்து...! புதுக்கோட்டையில் எனக்குத்தெரிந்த நண்பரின் நண்பர் கூப்பிட்டு, நான் சொல்லும் முகவரிக...
-
சென்னை:தமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின், 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழறிஞர்கள், ஆர்வலர்கள்...